ரெய்னாவுக்கு தோனி,ஹர்பஜன் ஆதரவு

சுரேஷ் ரெய்னா பற்றி வெளியான செய்திகளில் எந்த உண்மையும் இல்லை,” என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

இந்திய அணி கடந்த ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் இலங்கை சென்று, டெஸ்ட் மற்றும் முத்தரப்பு ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. அப்போது பாதுகாப்புக்காக இந்திய வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் ரகசிய “சிசிடிவி’ கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த “கேமரா’வில் சுரேஷ் ரெய்னா, சூதாட்ட ஏஜன்ட் ஒருவருக்கு நெருக்கமான பெண்ணை, இரவு நேரங்களில் அடிக்கடி சந்தித்த காட்சிகள் பதிவாகியுள்ளன. இது குறித்த செய்தியை லண்டனில் இருந்து வெளியாகும் “தி சண்டே டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்டது. ஆனால் இதனை இலங்கை மற்றும் இந்திய கிரிக்கெட் போர்டுகள் அதிரடியாக மறுத்துள்ளன.

தோனி ஆதரவு: இந்நிலையில், சக வீரர் ரெய்னாவுக்கு ஆதரவாக பேசியுள்ளார் இந்திய கேப்டன் தோனி. இது குறித்து அவர் கூறுகையில்,”” சூதாட்ட ஏஜென்ட்டுக்கு நெருக்கமான பெண்ணுடன், ரெய்னாவை தொடர்பு படுத்தி தவறுதலாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் எந்த உண்மையும் இல்லை,” என்றார். Buy Bactrim தோனியை தொடர்ந்து இந்திய சுழற் பந்து வீச்சாளர் ஹர்பஜனும், ரெய்னாவுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

Add Comment