இந்திய அணி அறிவிப்பு* மீண்டும் இஷாந்த், காம்பி

யூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும், இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக நீக்கப்பட்ட காம்பிர், இஷாந்த் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். இந்த அணியில் யுவராஜ் சிங்கிற்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க நியூசிலாந்து இந்தியா வருகிறது. முதல் டெஸ்ட் ஆமதாபாத்தில் நவ., 4 ம் தேதி துவங்குகிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட், ஐதராபாத் (நவ., 12-16), நாக்பூரில் (நவ., 20-24) நடக்கிறது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி தேர்வு நேற்று, தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் தலைமையில் சென்னையில் நடந்தது. இதில் கேப்டன் தோனி பங்கேற்கவில்லை. அவரிடம் தொலைபேசியில் அணி குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின் ஸ்ரீகாந்த் இந்திய அணியை அறிவித்தார்.

இதில் கேப்டன் தோனி, சச்சின், டிராவிட், சேவக் மற்றும் லட்சுமண் போன்ற “சீனியர்’ பேட்ஸ்மேன்கள் வழக்கம் போல இடம் பெற்றுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வரும் சச்சின், சமீபத்தில் தான் ஐ.சி.சி., சிறந்த வீரர் விருதை முதன் முறையாக வென்றார். இத்தொடரில் 50 வது சதத்தை எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
காயம் காரணமாக நீக்கப்பட்ட காம்பிர், மீண்டும் அணிக்கு திரும்பினார். இதனால் தமிழக வீரர் முரளி விஜய்க்கு, ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் தான்.

இளம் “மிடில் ஆர்டர்’:பெங்களூரு டெஸ்டில் திறமை நிரூபித்த இளம் சத்தீஸ்வர் புஜாராவுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவருடன் ரெய்னாவும் இணைந்து “மிடில் ஆர்டரில்’ சிறப்பாக செயல்படுகின்றார். இதனால் டெஸ்ட் அணியில் யுவராஜ் சிங்கிற்கு, வாய்ப்பு மீண்டும் மறுக்கப்பட்டுள்ளது. தவிர, சமீபத்தில் இடம் பெற்ற அபினவ் முகுந்த், உனாட்கட் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டனர்.

மீண்டும் இஷாந்த்:மொகாலி டெஸ்டில் சிறப்புமிக்க பேட்டிங்கை வெளிப்படுத்திய இஷாந்த் சர்மா, காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுடனான இரண்டாவது டெஸ்டில் இடம்பெறவில்லை. இவர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இவருடன் ஜாகிர் கான், ஸ்ரீசாந்த் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

சுழற் படை:சுழற்பந்து வீச்சிற்கு ஹர்பஜன் சிங், அமித் மிஸ்ரா மற்றும் பிரக்யான் ஓஜா என மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய வீரர்களுக்கு பெரும்பாலும் வாய்ப்பு தரப்பட்டுள்ளதால், அறிமுக வீரர்கள் யாரும் அணியில் இடம்பெறவில்லை. ஒருநாள் தொடருக்கான அணி பின்னர் அறிவிக்கப்படும்.

சிறந்த அணி:நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் அணி குறித்து தேர்வுக்குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் கூறியது: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். முக்கியமாக பெங்களூரு டெஸ்டில் இளம் வீரர்கள், சீனியர் பேட்ஸ்மேன்களுடன் இணைந்து, Amoxil online மறக்கமுடியாத வகையில் விளையாடினர். பவுலர்களும் அபார செயல்பாட்டை வெளிப்படுத்தினர்.
இதனால் தான் எதிர்வரும் மூன்று டெஸ்ட் போட்டிக்கும் இதே அணியை தேர்வு செய்தோம். நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் இந்திய வீரர்கள் தங்கள் வெற்றி நடையை தொடர்வார்கள் என நம்பிக்கை உள்ளது.

இந்திய அணியில் சிறந்த வீரர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. சிறந்த வீரர்கள் அடங்கிய இந்திய அணி வெல்லும். அணியில் இடம்பெற்றிருப்பவர்களைத் தவிர, மற்ற இளம் இந்திய வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல எதிர்காலம் உள்ளதை காட்டுகிறது. இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறினார்.

15 பேர்கள் கொண்ட அணி:
தோனி(கேப்டன்), சேவக், காம்பிர், டிராவிட், சச்சின், வி.வி.எஸ்.லட்சுமண், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன், அமித் மிஸ்ரா, ஜாகிர் கான், இஷாந்த் சர்மா, ஸ்ரீசாந்த், பிரக்யான் ஓஜா, முரளி விஜய், சத்தேஷ்வர் புஜாரா.

தொடர்ந்து இரண்டாவது இடம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-0 என வென்ற இந்திய அணி, தரவரிசையில் 117 புள்ளிகளுடன், தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. முதலிடத்தில் ஆஸ்திரேலியா (130) நீடிக்கிறது. இலங்கை (116), தென் ஆப்ரிக்கா (115), இங்கிலாந்து (112) அணிகள் அடுத்த 3 இடங்களை பிடித்துள்ளன.
பேட்ஸ்மேன்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் இருந்த தோனி (786 புள்ளி), நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டார். சேவக் (713) ஒருஇடம் முன்னேறி ஏழாவது இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுடன் ஒருநாள் தொடரில் பங்கேற்காத சச்சின் (711), இரண்டு இடங்கள் முன்னேறி எட்டாவது இடத்தை பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்த விராத் கோஹ்லி (684), 11 இடங்கள் முன்னேறி, 13 வது இடத்தை பிடித்துள்ளார். ஒருநாள் போட்டி பவுலர்கள் வரிசையில் பிரவீண் குமார் 12வது, ஹர்பஜன் 19 வது இடத்தில் உள்ளனர்.Add Comment