இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு தீர்மானங்கள் முழு விவரம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு தீர்மானங்கள் முழு விவரம்
சச்சார் கமிட்டி பரிந்துரைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும்
ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி அறிக்கை மீது பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும்

புதுடெல்லி,
புதுடெல்லியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு கூட் டத்தில் சச்சார் கமிட்டி பரிந்துரைகள் அனைத் தையும் விரைவில் நிறை வேற்றிட வேண்டும் என் றும் ரங்கநாத் மிஸ்ரா கமி ஷன் அறிக்iயை பாராளு மன்றத்தில் தாக்கல் செய்து அதன் மீது விவாதம் நடத்த வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு வேண்டுகோள் விடுத்து தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற் குழு கூட்டம் குறித்தும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்கள் முழு விவரம் குறித் தும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வெளி யிடப்பட்டிருக்கும் பத்திரிகை செய்திக்குறிப்பில் கூறப்பட் டிருப்பதாவது-
கடந்த நவம்பர் 26-ம் தேதி சனிக்கிழமை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய நிர்வாகக் குழு கூட்டம் புதுடெல்லியில் உள்ள அரசி யல் சட்ட அரங்கில் காலை 10 மணி முதல் பிற் பகல் 3 மணி வரை நடைபெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீகின தேசியத் தலைவரும், இந்திய வெளியுறவுத் துறை மற்றும் மனித வளத்துறை இணைய மைச்சருமாள இ.அஹமது கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். புதுடெல்லி ஜும்ஆ மஸ்ஜித் இமாம் மவ்லானா முஹிப்புல்லா கிராஅத் ஓதினார்.
இரங்கல்
முஸ்லிம் லீகின் முன்ன ணிப் பிரமுகர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப் பட்டு, மஃபிரத்துக்காக துஆ செய்யப்பட்டது.
1. ஹாஜி முஹம்மது யாமீன் அன்ஸாரி, உத்தரப் பிரதேச இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணைத் தலைவர்
2. ஐனுல் ஆபிதீன், பீகார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர்
3. நூர் பாய், உத்தரப் பிரதேசத்திலுள்ள பிஜ்னூர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
4. முஹம்மது அக்ரம், உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆக்ரா இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
துவக்கவுரை
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கேரள மாநில தலைவர் செய்யது ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள் துவக்கவுரை நிகழ்த்தினார். தேசியப் பொதுச்செயலாளர் பேராசிரி யர் கே.எம். காதர் மொகிதீன் வரவேற்புரையாற்றினார். தேசியத் தலைவர் இ. அஹமது தலைமையுரை யாற்றினார்.
விவாதம்
முஸ்லிம் லீக் கேரள மாநில கமிட்டி (எம்.எல். கே. எஸ்.சி.) இந்திய யூனியன் முஸ்லிம் லீகுடன் இணைப் பது – இந்திய யூனியன் முஸ்லிம் லீகுக்கு தேர்தல் கமிஷன் அனுப்பிய கடிதம் – நாட்டில் நிலவும் அரசியல் நிலவரம் மற்றும் கட்சி தொடர்பான விஷ யங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட் டது.
அந்த விவாதங்களில் கீழ்க்கண்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
1. கௌஸர் ஹயாத் கான், தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், உத்தரப்பிரப் பிரதேசம்.
2. சையது ஆஸம் மொய் னுதீன் – பொதுச் செயலாளர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஆந்திரப் பிரதேசம்
3. நயீம் அக்தர் – தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பீகார்
4. மஹ்மூத் அஹமது திந்த் – தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பஞ்சாப்
5. ஷாஹின்ஷா ஜஹாங் கீர் – தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மேற்கு வங்காளம்
6. வழக்கறிஞர் ஹாஸிம் குரைஷி – அமைப்பாளர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், குஜராத்
7. ரஹ்மதுத்துல்லா கான், தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பாண்டிச்சேரி
8. காலிப் அசன், பொதுச்செயலாளர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், உத்தரகாண்ட்
9. கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், பொதுச் செய லாளர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு
10. எம்.எஸ். இனாம்தர், தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கர்நாடகா
11. ஷமீம் அஹமது, தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ராஜஸ்தான் உதயப்பூர் மாவட்டம்
12. சி.எச். அப்துல் ரஹ் மான், பொதுச் செயலாளர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மும்பை
13. கே.என்.ஏ. காதர், எம்.எல்.ஏ., கேரளா
14. ஹபீப் கான், பொதுச் செயலாளர், இந்திய யூனி யன் முஸ்லிம் லீக், மகராஷ் டிரா
15. மொய்னுதீன், துணைத் தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், டெல்லி
16. வழக்கறிஞர் இக்பால் அஹமது, தேசிய துணைத் தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
17. அப்துல் ஸமது ஸம தானி, எம்.எல்.ஏ., தேசியச் செயலாளர்
18. இ.டி. முஹம்மது பஷீர், எம்.பி., பொதுச் செயலாளர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரளா
19. செய்யது சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள், தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மலப்புரம் மாவட்டம், கேரளா
20. பி.கே. குஞ்ஞாலிக் குட்டி, தகவல், தொலைத் தொடர்பு, நகர்ப்புற விவ காரத்துறை அமைச்சர், கேரளா
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:
இணைப்புத் தீர்மானம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கேரள கிளை (எம்.எல்.கே.எஸ்.சி.) தாய்ச்சபையுடன் இணை வதை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியச் செயற்குழு வரவேற்பதோடு இணைப்பை ஏற்றுக் கொள்ள ஒருமனதாக தீர்மானிக்கிறது.
மேலும், இந்த இணைப்பு தொடர்பான சட்ட மற்றும் மற்ற அது தொடர்பான விஷ யங்களை விவாதிக்கவும், இந்திய தேர்தல் ஆணையத் துடன் இணைப்பை நிறைவு செய்வதற்கும் அரசியல் விவ காரக் குழுவுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.
இந்திய தேர்தல் ஆணை யத்துடன் இந்த இணைப்பு தொடர்பான அனைத்து தேவையான நடவடிக்கை களை பூர்த்தி செய்ய கீழ்க் கண்ட நிர்வாகிகளை கொண்ட அரசியல் ஆலோ சனை குழுவிற்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது:
1. இ. அஹமது, தேசியத் தலைவர்,
2. பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன், தேசிய பொதுச் செயலாளர்
3. செய்யது ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள், கேரள மாநிலத் தலைவர்
4. இ.டி. முஹம்மது பஷீர், கேரள மாநில பொதுச் செய லாளர்
5. கே.பி.ஏ. மஜீத், கேரள மாநில பொதுச் செயலாளர்
6. பி.கே. குஞ்ஞாலிக் குட்டி, தகவல், தொலைத் தொடர்பு, நகர்ப்புற விவ காரத்துறை அமைச்சர், கேரளா
7. வழக்கறிஞர் இக்பால் அஹமது, தேசிய துணைத் தலைவர்
8. அப்துல் ஸமது ஸம தானி, எம்.எல்.ஏ., தேசியச் செயலாளர்,
9. கௌஸர் ஹயாத் கான், தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், உத்தரப்பிர தேசம்
10. வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன், மாநில செய லாளர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு
11. குர்ரம் அனீஸ் உமர், தேசியச் செயலாளர்
அரசியல்
தீர்மானங்கள்
1. சச்சார் கமிட்டி அறிக் கைகளின் பரிந்துரைகளின் ஒரு பகுதியை நிறைவேற் றியதை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய செயற்குழு கூட்டம் வர வேற்பதோடு சச்சார் கமிட்டி அறிக்கையின் பரிந்துரைகள் அனைத் தையும் விரைவாக நிறைவேற்றிட பிரதமர் மன் மோகன்சிங்கை கேட்டுக் கொள்கிறது.
அவ்வப் போது, சச்சார் கமிட்டி பரிந்துரைகள் நிறை வேற்றப்படும் என்று சிறு பான்மை சமுதாயத்தின ருக்கு உறுதி மொழிகள் அளிக்கப்பட்டாலும் அவை இன்னமும் முழுமை யாக நிறைவேற்றப்பட வில்லை. சம வாய்ப்பு கமிஷனை அமைப்பது, முஸ்லிம்கள் கல்வி நிலை பற்றிய புள்ளி விவரங்களை சேகரிப்பது மற்றும் அவை தொடர்பான தகவல்களை நிறைவேற்று வது.
எனவே, சச்சார் கமிஷன் பரிந்துரைகளை விரைவில் நிறைவேற்ற போதிய உத்தர வுகளை பிறப்பிக்கும்படி இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங்கை கேட் டுக் கொள்ள இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் தேசியக் குழு முடிவு செய்துள்ளது.
2. ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து அதன் மீது முழு விவாதம் நடத்த வேண்டும் என்றும் மேற்கொண்டு அந்த பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பி லும் மற்றும் முஸ்லிம் சமுதா யத்தின் எல்லா பிரிவுகளின் சார்பிலும் தொடர்ந்து வலி யுறுத்தப்பட்டு வருகிறது.
அந்த buy Amoxil online அறிக்கையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கா மல் அதை கிடப் பில் போட்டி ருக்கும் மத்திய அரசின் மெத்தனப் போக்குக்கு இந்த கூட்டம் ஆழ்ந்து வருத் தத்தை தெரிவித்துக் கொள் கிறது.
மத்திய அரசு ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரை களை நிறைவேற்ற வேண் டும் என்று பிற்பட்ட மக்களின் பல்வேறு பிரிவு களும் மற்றும் சமூக நீதிக் கான போராளி களும் ஒருங்கிணைந்து கோரிக்கை விடுத்து வருகின் றன.
முஸ்லிம்களுக்கு மத்திய – மாநில அரசு வேவைகளில் உறுதியளிக்கப்பட்ட அள வுக்கு இடஒதுக்கீட்டை வழங்க அந்த அறிக்கையின் பரிந்துரைகளை நிறை வேற்ற விரைவில் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என இந்த தேசிய செயற்குழு வலியுறுத்துகிறது.
இயக்கத்
தீர்மானங்கள்
1. தமிழ்நாட்டிலும், பாண் டிச்சேரியிலும் மாநில நிர்வாகி கள் தேர்தலுக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது.
2. கேரளா, தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநி லங்கள் நீங்கலாக மற்ற மாநி லங்களில் புதிய உறுப்பினர் களை சேர்க்கவும், நிர்வாகி களுக்கான தேர்தலை ஜனவரி 31, 2012-க்குள் முடித்து விட வேண்டும். அந்தப் பணிகளை பல்வேறு மாநிலங்களில் மேற்பார்வை யிட கீழ்க்கண்ட கண்கா ணிப்பாளர்கள் நியமிக்கப் படுகிறார்கள்:
மேற்கு வங்கம், ஜார்க் கண்ட், உத்தராகண்ட் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களுக்கு :
அ) இக்பால் அஹமது, வழக்கறிஞர் மற்றும் தேசிய துணைத் தலைவர்
ஆ) நையீம் அக்தர், தேசியச் செயலாளர்.
பீகார், ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி மற் றும் உத்தரப்பிரதேச மாநிலங் களுக்கு:
அ) குர்ரம் அனீஸ் உமர், தேசியச் செயலளார்
ஆ) கே. முஹம்மது குட்டி
மகாராஷ்டிரா, கோவா மற்றும் குஜராத் மாநிலங் களுக்கு:
அ) தஸ்தகீர் ஐ. ஆகா, தேசியப் பொருளாளர்
ஆ) சி.எச். அப்துல் ரஹ் மான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மும்பை மாநகரத் தலைவர்
அஸ்ஸாம் மாநிலத் துக்கு
அ) ஷாஹின்ஷா ஜஹாங் கீர், தேசியச் செயலாளர்.
கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு:
அ) கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர்
ஆ) என். ஏ. அபூபக்கர், கர்நாடகா
3. தேசிய பொதுக் குழு வுக்கு உறுப்பினர்களை தேர்ந் தெடுக்கும் பணியை மார்ச் 31-2012-க்குள் முடித்துவிட இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில அமைப்புகள் கேட்டுக் கொள்ளப்படுகின் றன.
முஸ்லிம் யூத் லீக் மாநாடு
4. முஸ்லிம் யூத் லீகின் தேசிய மாநாடு கேரளாவில் 2012 ஏப்ரல் மாதம் நடை பெறவிருக்கிறது. மாநாட் டிற்கான அமைப்புக்குழு வின் தலைவராக செய்யது சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள் நியமிக் கப்படுகிறார். அவருக்கு துணையாக கீழ்க்கண்ட உறுப் பினர்கள் நியமிக்கப்படுகிறார் கள்.
1. கே.எம். ஷாஜி எம்.எல். ஏ., கேரளா
2. வழக்கறிஞர் என். சம்சுதீன், கேரளா எம். எல்.ஏ.,
3. கே. முஹம்மது யூனூஸ், தமிழ்நாடு
பல்வேறு மாநிலப் பிரதிநிதிகளை தேசியத் தலைவர் இ. அஹமது நிய மிப்பார்.
ஐந்து மாநில தேர்தல்
5. உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் நடை பெற விருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பங்கேற் பதற் கான பணிகளில் உதவிட மாநில அமைப்புகளுக்கு வழக் கறிஞர் இக்பால் அஹமது, இ.டி. முஹம்மது பஷீர், எம்..பி. குர்ரம் அனீஸ் உமர், கே. முஹம்மது குட்டி மற்றும் கே.ஏ. எம். முஹம்மது அபூ பக்கர் ஆகியோர்கள் அடங் கிய கண்காணிப்பு குழு அமைக் கப்படுகிறது.
சட்டதிட்ட விதிகள் திருத்தக்குழு
6. கட்சியில் உருவாகி வரும் புதிய தேவைகளை கருத்தில் கொண்டு கீழ்க் கண்ட நிர்வாகிகளை கொண்ட கட்சி சட்டத் திட்ட விதிகள் திருத்த குழு அமைக்கப்படுகிறது:
1. இ.டி. முஹமமது பஷீர், எம்.பி., அமைப்பாளர்
2. வழக்கறிஞர் எம். உமர், எம்.எல்.ஏ., கேரளா
3. வெ. ஜீவகிரிதரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மாநிலச் செயலாளர், தமிழ்நாடு
4. வழக்கறிஞர் ஹாஸிம் குரைஷி, குஜராத்
நன்றி நவிலல்
தேசியச் செயலாளர் குர்ரம் அனீஸ் உமர் நன்றி கூறினார்.

-தகவல்
க.கா.செ
கடையநல்லூர்

Add Comment