தேசிய நெடுஞ்சாலைக்கான எண்களை மாற்ற அரசு திட்டம்

தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள பெரும்பாலான தேசிய நெடுஞ்சாலைகளின் எண்கள் மாற்றம் செய்யப்பட உள்ளன. இந்த திட்டத்தை செயல்படுத்த அனைத்து மாநில தேசிய நெடுஞ்சாலை உயர் அதிகாரிகள் கூட்டம் விரைவில் கூட்டப்பட உள்ளது.

தமிழகம்-கேரளாவை இணைக்கும் சேலம்-கன்னியாகுமரி நீண்ட தூர தேசிய நெடுஞ்சாலை என்எச் 47 என்பதற்குப் பதில் இனி என்எச் 544 என்று அழைக்கப்பட உள்ளது. மேலும் இதே பாதை சேலத்தில் இருந்து கேரள மாநிலம் இடப்பள்ளி என்ற பகுதியுடன் நிறைவுபெற உள்ளது.

அங்கிருந்து குமரி வரை வரும் தேசிய நெடுஞ்சாலை என்எச் 66 என்றழைக்கப்படும். கன்னியாகுமரி வரை செல்கின்ற என்எச் 66 அங்கு கன்னியாகுமரி-காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையுடன் (என்எச் 44) சேரும்.

இந்தியாவில் முதல் தரம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலையாக என்எச் 44 மாற உள்ளது. காஷ்மீரில் தொடங்கி ஹரியானா, டெல்லி, உத்திரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, வழியாக வரும் தேசிய நெடுஞ்சாலை 44 கன்னியாகுமரியை வந்தடைகிறது.

கொல்லம்-புனலூர் தென்காசி தேசிய நெடுஞ்சாலை (என்எச் 208) திருமங்கலத்தில் என்எச் 44ல் இணைகிறது. இனி கொல்லம்-புனலூர்-தென்காசி நெடுஞ்சாலை, என்எச் 744 ஆக பெயர் மாறுகிறது.

திண்டுக்கல்-குமரி-கோட்டயம்-அடூர்-கொட்டாரக்கரை Viagra online பாதை என்எச் 183 ஆகவும், கொச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை என்எச் 85 ஆகவும் மாற்றம் பெற உள்ளன.

Add Comment