ஓய்வுப்பெறும் வயது..

விக்கித்துப்போகும்
வியாதிகளை
ஒளித்துக்கொண்டு
என்னோடுச் சிரித்துக்
கொண்டு நீ!

வினவினாலும்
விடையாய் உன் சிரிப்பைச்
சிறகாய் விரிப்பாய்!

புரிந்துக்கொண்டேன்;
வலியில்லை என
வளைகுடாவில்;
நான் உரைப்பதுப் போல!

உறவுகளுக்காக
விறகாய் நான் இங்கே;
எனக்காக மட்டுமே
உறவுகளுடன்
விறகாய் நீ அங்கே!

விரயமான காலங்கள்
வருமானமாய் நிற்கும்;
நரைத்த நம் தலைமுடிகள்
நம் இளமைக்காக தவிக்கும்!

ஓடிவிளையாடும் வயதில்
முடங்கிவிட்டோம்
ஆளுக்கொரு Buy Lasix தேசத்தில்;
நேசத்தைத் தேடி
குச்சை ஊண்டும் வயதில்
ஓடிவருகிறேன் உனைத் தேடி!

பருவத்தை
பாலையில்
பயிர்செய்து;
முதுமையால்
முடிந்துப் போன
வேலையால்;
நாட்டிற்கு வருகிறேன் உன்
நாதிக்காக வருகிறேன்!

– யாசர் அரஃபாத்

Add Comment