கேரள அரசின் பொய் பிரசாரத்தை நிறுத்தும்படி பிரதமரிடம் திமுக மனு

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக & கேரள கட்சிகளுக்கு இடையே மோதல் வலுத்து வருகிறது. அணையின் Bactrim No Prescription பாதுகாப்பு பற்றி கேரளா செய்து வரும் பொய் பிரசாரத்தை தடுக்கும்படி திமுக எம்பிக்களும், புதிய அணை கட்ட அனுமதிக்கும்படி கேரளாவை சேர்ந்த மத்திய அமைச்சர்களும் பிரதமரை சந்தித்து வலியுறுத்தினர். இதனால், இந்த பிரச்னை பூதாகரமாகி வருகிறது.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இப்போதுள்ள 132 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தும்படி தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இதை ஏற்க மறுத்து வரும் கேரள அரசு, புதிய அணை கட்டவும் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. அணைக்கு அருகில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் சில வாரங்களாக அடிக்கடி லேசான நில அதிர்வு ஏற்பட்டு வருகிறது. இதனால், அணைக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக கேரள அரசும், கட்சிகளும் பூதாகரமாக பிரச்னை கிளப்பி வருகின்றன. புதிய அணை கட்ட அனுமதிக்கும்படி தமிழக அரசை நிர்பந்திக்கும்படி மத்திய அரசை வலியுறுத்தி கேரளாவை சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதற்கிடையே, திமுக எம்.பி.க்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது, திமுக சார்பில் அவரிடம் அளிக்கப்பட்ட மனுவில், ‘முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு பற்றி கேரள அரசும், கட்சிகளும் மக்களிடையே பீதியை கிளப்பும் வகையில் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில் வெளியான ‘டேம் &999’ என்ற திரைப்படமும் இந்த யுத்தியில் ஒன்றுதான். ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட அணை உடைவது போல் இந்த திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்துக்கு தேசிய அளவில் தடை விதிக்க வேண்டும். கேரளாவின் இந்த செயல்களால் தமிழக & கேரள மக்களிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலையையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்தி வருகிறது.

உச்ச நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு வெளியாகும் வரை, இதுபோன்ற தவறான பிரசாரத்தில் ஈடுபட வேண்டாம் என்று கேரள அரசை தாங்கள் வலியுறுத்த வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, புதிய அணை கட்ட அனுமதிக்கும்படி கேரளாவை சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்களுக்கு போட்டியாக, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும்படி வலியுறுத்தி, தமிழகத்தை சேர்ந்த 4 எம்பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அருகருகே நடந்த இந்த போட்டாபோட்டி போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

4 மாவட்டத்தில் பந்த்: இயல்புநிலை பாதிப்பு

திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட வலியுறுத்தி கேரளாவில் இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் நேற்று அனைத்துக் கட்சி சார்பில் ‘பந்த்‘ நடத்தப்பட்டது. இதனால் இந்த மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதித்தது. இந்த மாவட்டங்களில் கடைகள், தனியார் வர்த்தக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் உட்பட வாகனங்களும் இயங்கவில்லை.

Add Comment