பிளஸ் 1 மாணவர்கள், உலமாக்களுக்கு இலவச சைக்கிள்

பிளஸ் 1 மாணவர்கள், உலமாக்களுக்கு இலவச சைக்கிள்

பிளஸ் 1 மாணவர்கள் மற்றும் உலமாக்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதல்வரால் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப் பட்டது. தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் மற்றும் பகுதியாக நிதியுதவி பெறும்

பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் அனைத்துப் பிரிவு மாணவ, மாணவிகளுக்கும் சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன.

நடப்பு கல்வியாண்டில் ரூ. 178 கோடியே 20 லட்சம் செலவில் 2,76,776 மாணவர்களுக்கும், 3,42,151 மாணவியர்களுக்கும் மொத்தம் 6,18,927 சைக்கிள்கள் வழங்கப்படும்.

உலமாக்கள், Cialis online பள்ளி வாசல்களில் பணிபுரியும் இமாம்கள், மோதினார்கள், தர்க்காக்களில் பணிபுரியும் முஜாவர்கள், மதரஸôவில் பணிபுரியும் அரபி ஆசிரியர்கள் என 11,457 நபர்களுக்கு ரூ. 3 கோடியே 18 லட்சத்து 4 ஆயிரத்து 632 செலவில் சைக்கிள்கள் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

பிளஸ் 1 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, 7 மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா சைக்கிள்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து 7 உலமாக்களுக்கும் அவர் சைக்கிள்களை வழங்கினார்.

புதிய இணையதளங்கள்:

மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள 27 சதவீத இடஒதுக்கீட்டின் பயனைப் பெறுவதற்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சான்றிதழ் பெற www.tn.gov.in.bcmbcmwgrievances.html என்ற இணையதளத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இந்த இணையதளம் மத்திய அரசுப் பணிகள், கல்வி உதவித் தொகை பெறுபவர்கள், தேவையான சான்றிதழ்களை வட்டாட்சியரிடமிருந்து விரைவாகப் பெறுவதற்கு பயன்படும்.

ABU JAZEERA(AL ELITE GROUP)

Add Comment