ஓமலூர் மாணவி சுகன்யா கொலை வழக்கு-போலீஸ் சந்தேக வலையில் பாதிரியார்கள் உள்பட 8 பேர்

சேலம் மாவட்டம் Amoxil online ஓமலூரில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில், விடுதியில் தங்கிப் படித்து வந்த 17 வயது மாணவி சுகன்யா கொலை வழக்கில் பாதிரியார்கள் சிக்குகிறார்கள். நான்கு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த வழக்கு தற்போது தூசி தட்டி எடுக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள தோழுரைச் சேர்ந்த சண்முகம் மகள் சுகன்யா. ஓமலூரில் தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 2006ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் தேதி சுகன்யாவைக் காணவில்லை. இந்த நிலையில், 18ம் தேதி பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றில் சுகன்யா பிணமாக மிதந்தார்.

இதையடுத்து ஓமலூரில் பதட்டம் ஏற்பட்டது. மாணவி கற்பழித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல் பரவவே பொதுமக்கள் திரண்டு வந்து பள்ளிக்கூடத்தை அடித்து நொறுக்கி சூறையாடினர்.

இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த தற்போது மாணவியின் வழக்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சூடு பிடித்துள்ளது. மாணவியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சுகன்யாவின் கருப்பையில் விந்தனு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் பாலியல் பலாத்காரம் செய்தே கொல்லப்பட்டிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

அந்த விந்தனுக்குரியவர் யார் என்று போலீஸார் தற்போது பட்டியல் தயாரித்துள்ளனர். அதில் 8 பேர் மீது போலீஸாருக்குச் சந்தேகம் வந்துள்ளது. இவர்களில் சிலர் பாதிரியார்கள் என்று கூறப்படுகிறது. அதிலும் 6 பேர் 50 வயதைக் கடந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

இவர்களுக்கு மரபணு சோதனை நடத்தி விந்தனுக்குரியவர் யார் என்பது உறுதி செய்யப்படவுள்ளது. இதற்காக விரைவில் கோர்ட் அனுமதியைப் போலீஸார் பெற்று நடவடிக்கையில் இறங்கவுள்ளனர்.

Add Comment