ஊழல் நாடுகள் பட்டியல்: இந்தியாவுக்கு 95-வது இடம்

டிரான்பரன்ஸி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ள ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியா 95-வது இடத்தைப் பிடித்துள்ளது.
இதன்மூலம் சீனாவைவிட ஊழல் மிகுந்த நாடு என்ற வேதனை மிகுந்த பெருமையை இந்தியா பெற்றுள்ளது. சீனா இந்த பட்டியலில் 75-வது இடத்தில் உள்ளது. எனினும் பாகிஸ்தானை பார்த்து நாம் சிறிது ஆறுதல் அடையலாம். பாகிஸ்தான் Buy cheap Doxycycline 134-வது இடத்தில் உள்ளது.
இந்த பட்டியலில் நியுஸிலாந்து முதலிடத்தைப் பிடித்து அனைத்து நாடுகளையும்விட நாங்கள்தான் ஊழல் குறைவானவர்கள் என்று நிரூபித்து சாதனை புரிந்துள்ளது.
ஊழல் குறைவான நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்த நாடுகள்:
1.நியுஸிலாந்து
2.டென்மார்க்
3.ஃபின்லாந்து
4.ஸ்வீடன்
5.சிங்கப்பூர்
6.நார்வே
7.நெதர்லாந்து
8.ஆஸ்திரேலியா
8.ஸ்விட்சர்லாந்து
10.கனடா
இதில் அமெரிக்கா 24-வது இடத்தையும், சவூதி 57-வது இடத்தையும், துருக்கி 61-வது இடத்தையும், இலங்கை 86-வது இடத்தையும் பிடித்துள்ளன.

__நன்றி தினமணி

Add Comment