தி.மு.க. கூ‌ட்ட‌ணி‌யி‌ல் ‌வி‌ரிச‌ல்?

ட‌ந்த ‌சில நா‌ட்களு‌க்கு ‌மு‌ன்பு மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம், 125 வருட பார‌ம்ப‌ரிய க‌ட்‌சியான கா‌ங்‌கிர‌‌‌ஸ் க‌ட்‌‌சியை Ampicillin No Prescription ‌‌விம‌ர்‌சி‌த்து வரு‌ம் ‌திருமாவளவ‌ன், கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி தயவா‌ல் ‌கிடை‌த்த எ‌ம்.‌பி. ப‌த‌வியை ரா‌‌ஜினாமா செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று பே‌சி ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌யினை உசு‌ப்பே‌ற்‌றினா‌ர்.

இத‌ற்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்த ‌‌‌திருமாவளவ‌‌ன், பூத் ஏஜெண்டுகள் கூட இ‌ல்லாத க‌ட்‌சி காங்கிர‌‌‌‌ஸ் க‌ட்‌சி எ‌ன்று‌ம் எனது பாட்டன் கக்கனு‌ம், காமராஜரு‌ம் வள‌ர்‌த்த க‌ட்‌சி எ‌ன்று‌ம் த‌லி‌த் போ‌ர்வை‌யி‌ல் வள‌ர்‌ந்த க‌ட்‌சி கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌‌சி எ‌ன்‌று‌ம் சாடி‌யிரு‌ந்தா‌ர்.

இத‌‌னிடையே சென்னை, அசோக் நகர் பகுதியில் உள்ள ராஜீவ் காந்தியின் சிலையை அவமதித்ததாக விடுதலைச் சிறுத்தைகள் மீது பழிபோட்டு சாலை மறியல் போன்ற நடவடிக்கைகளில் கா‌ங்‌கிரசா‌ர் ஈடுப‌ட்டு வ‌ந்தன‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து தி.மு.க. கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் சதி வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்‌திரு‌ந்தா‌ர்.

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணிக்கு துரோகம் இழைக்கும் வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் நடவடிக்கைகள் உள்ளன என்று தமிழ்நாடு காங்கிரஸ் க‌ட்‌சி‌த் தலைவர் கே.‌வி.தங்கபாலு குற்றம்சா‌ற்‌றி‌னா‌ர்.

‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சியை க‌‌ண்டி‌த்து கட‌ந்த 3 நா‌‌ட்களாக கா‌‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌யின‌ர் த‌மிழக‌ம் முழுவது‌ம் போரா‌ட்ட‌ம், சாலை ம‌றிய‌ல் நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

ரா‌‌ஜீ‌வ் கா‌ந்‌‌தி‌யி‌ன் ‌சிலையை த‌ங்க‌ள் க‌ட்‌சி‌யின‌ர் அவம‌தி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று ‌திருமாவள‌வ‌ன் கூ‌றிய ‌நிலை‌யிலு‌ம், தொட‌ர்‌‌ந்து அ‌ந்த க‌ட்‌சி‌க்கு ‌எ‌திராகவு‌ம், ‌திருமாவளவனு‌க்கு எ‌திராகவு‌ம் கா‌ங்‌கிர‌‌ஸ் க‌ட்‌சி தொட‌ர்‌ந்து போரா‌ட்ட‌ம் நட‌த்‌தி வருவது ‌தி.மு.க. கூ‌ட்ட‌ணி‌யி‌ல் இரு‌ந்து ‌விலக இதுவொரு காரண‌ம் எ‌ன்றே எ‌ண்ண‌த் தோ‌ன்று‌கிறது.

த‌‌மிழக கா‌ங்‌கிர‌‌சி‌ல் உ‌ள்ள ‌கீ‌ழ்‌ம‌ட்ட தலைவ‌ர்க‌ள் ‌முத‌ல் மே‌ல்ம‌ட்ட தலைவ‌ர்க‌ள் வரை த‌மிழக அரசையு‌ம், அமை‌ச்ச‌ர்களையு‌ம் கடுமையாக ‌விம‌ர்‌சி‌த்து வரு‌கிறா‌ர்க‌ள். இதனை மே‌லிட‌‌த்‌தி‌ற்கு ‌தி.மு.க. கொ‌‌ண்டு செ‌ன்றாலு‌ம், பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டிய கதையாகவே அந்த விவகாரத்தை கையாண்டு வருகிறது கா‌ங்‌கிர‌ஸ் தலைமை.

கட‌ந்த ‌சில மாத‌‌ங்களு‌க்கு மு‌ன்பு கோவை‌யி‌ல் நடைபெ‌ற்ற க‌ட்‌சி‌யி‌ன் பொது‌க் கூ‌ட்ட‌த்‌தி‌ல் பே‌சிய அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயல‌‌ர் ஜெயல‌‌லிதா, ‌நீ‌ங்க‌ள் ‌விரு‌ம்புவதுபோல கூ‌ட்ட‌‌ணி அமையு‌ம் எ‌ன்று, தங்கள் கூட்டணிக்கு கா‌‌ங்‌கிர‌ஸ்‌ வரும் என்பதுபோல் மறைமுகமாக பே‌சினா‌ர்.

இ‌ப்படி‌ப்ப‌ட்ட சூ‌ழ்‌நிலை‌யி‌ல் தற்போது, ‌தி.மு.க. கூ‌ட்ட‌ணி‌யி‌ல் உ‌ள்ள ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌க்கு எ‌திரான போரா‌ட்ட‌த்தில் கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி ஈடுப‌ட்டு வரு‌கிறது. த‌ற்போது வரை ‌தி.மு.க. தலைவ‌ர் கருணா‌நி‌தி‌யிட‌ம் இரு‌ந்து எ‌ந்த‌விதமான ப‌திலு‌ம் வர‌‌வி‌ல்லை. அ‌ப்படி வ‌ந்தாலு‌‌ம், கூ‌ட்ட‌ணியை ‌பி‌ரி‌க்க ச‌தி நட‌க்‌கிறது எ‌ன்று அவ‌ர் சொ‌ல்‌லி த‌ப்‌பி‌த்து‌‌க் கொ‌ள்ளலா‌ம் அ‌ல்லது இரு க‌ட்‌சிகளு‌‌க்கு‌ம் அவ‌ர் வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌‌க்கலா‌ம்.

‌திருமாவளவனு‌க்கு எ‌திரான போரா‌ட்டதை கா‌ங்‌கிர‌ஸ் மே‌லிட‌த்‌தி‌ன் அனும‌தியுடனேயே த‌மிழக கா‌ங்‌கிர‌சா‌‌ர் அர‌ங்கே‌ற்‌றி வருவதாக ‌நினை‌க்க‌த் தோ‌ன்று‌கிறது. ‌‌திருமாவளவனை கூ‌ட்ட‌ணி‌யி‌ல் இரு‌ந்து ‌தி.மு.க. வெ‌ளியே‌ற்ற வே‌ண்டு‌ம் அ‌ல்லது நா‌ங்க‌ள் வெ‌ளியேறு‌ம் எ‌ன்று‌கா‌ங்‌கிர‌ஸ் ‌மிர‌ட்டினாலு‌ம் ஆ‌ச்ச‌ரிய‌ம் இ‌‌ல்லை.

அ‌ப்படியே கா‌ங்‌கி‌ர‌‌‌ஸ் ‌வில‌கினாலு‌ம் பா‌தி‌க்கு அ‌ந்த க‌ட்‌சி‌க்குத்தானே த‌விர எ‌ங்களு‌க்கு இ‌ல்லை எ‌ன்று கூறு‌ம் ‌தி.மு.க.‌வின‌ர், கா‌‌ங்‌கிரசை ‌விட ‌‌திருமாவளவ‌னிட‌ம் ஓ‌ட்டுவ‌ங்‌கி அ‌திகமாக இரு‌க்‌கிறது எ‌‌ன்று‌ம் கூ‌று‌கி‌‌ன்றன‌‌ர்.

‌‌தி.மு.க., அ.இ.அ.‌தி.மு.க. ஆ‌கிய க‌ட்‌சிகளுட‌ன் மா‌‌றி மா‌றி கூ‌ட்ட‌ணி வை‌த்து ‌பிழை‌ப்பு நட‌த்‌தி வரும‌கா‌ங்‌கிர‌ஸ் கட‌‌சி, த‌னி‌த்து‌ப் போ‌ட்டி‌யி‌ட்டா‌ல்…..சொ‌ல்லவே வே‌ண்டா‌‌‌‌ம்!

மொ‌த்த‌த்‌தி‌ல் ‌தி.மு.க. கூ‌‌ட்ட‌ணி‌யி‌ல் இரு‌ந்து வெ‌ளியேறவே ‌திருமாவளவனை த‌ற்போது கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி கை‌யி‌ல் எடு‌த்து‌ள்ளது எ‌ன்று அர‌சிய‌ல் நோ‌க்க‌ர்க‌ள் கருது‌கி‌ன்றன‌ர்.!

அதுதான் இவர்களுக்கென்றே இருக்கிறதே ”அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை… எதிரியும் இல்லை” என்ற வசனம்!

Add Comment