சத்துணவு, அங்கன்வாடி மையத்தில் 28 ஆயிரம் பேருக்கு உடனடி வேலை : முதல்வர் ஜெயலலிதா உத்தரவு!

குழந்தைகள் மையங்களை ரூ.98 கோடி செலவில் பழுதுபார்க்கவும் மேம்படுத்தவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள சுமார் 28 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கை: 6 வயது வரை உள்ள குழந்தைகள், வளர் இளம் பெண்கள், கர்ப்பிண¤கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் ஓய்வூதியம் பெறும் முதியோர் உள்பட 28 லட்சத்துக்கும் அதிகமானோர் பயன்பெறும் குழந்தைகள் மையங்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அந்த வகையில் சொந்த கட்டிடங்களில் செயல்படும் சிறிய பழுதுகள் உள்ள 10,372 மையங்கள், மற்றும் பெரிய பழுதுகள் உள்ள 7,499 மையங்களை ரூ.47 கோடியே 61 லட்சத்தில் சீரமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த மையங்களில் ரூ.27 கோடியே 21 லட்சத்தில் மின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். ரூ.23 கோடியே 78 லட்சத்தில் கழிப்பிடங்கள் கட்டப்படும். எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் தற்போது காலியாக உள்ள 4,373 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள், 5,717 சமையலர் பணியிடங்கள், 6,703 சமையல் உதவியாளர் பணியிடங்கள், ஒருங்கிணைந்த Buy cheap Levitra குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள 4,869 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள், 1,168 குறு அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள் மற்றும் 5,946 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் என மொத்தம் 28,596 பணியிடங்களை உடனடியாக நிரப்ப முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

___நன்றி தமிழ் முரசு

Add Comment