மின்சாரம் தடைபடும்போது ஆறுமணி நேரத்துக்கு ரூபாய் 50 வீதம் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்க வேண்டும்

மின்சாரம் தடைபடும்போது
ஆறுமணி நேரத்துக்கு ரூபாய் 50 வீதம் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்க வேண்டும்
மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு

சென்னை, டிச.2:
“மின்சாரம் தடைபடும் ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும், 50 ரூபாய் வீதம் நுகர்வோருக்கு, மின் வாரியம் நிவாரணம் தர வேண்டும்,” என, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள் ளது.
மின் நுகர்வோருக்கான உரிமைகள் மற்றும் நுகர் வோரின் குறை தீர்ப்புக் கான காலக்கெடு குறித்த, தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் உத்தரவு விவரம்:
மின் நுகர்வோர், தங் களது குறைகள் தொடர் பான அனைத்து முறை யீடுகளையும், மின் பகிர் மான கழகத்தின் பிரிவு அலுவலகங்களில் நேரடி யாகவோ, தபால் மூலமா கவோ தரலாம். பிரிவு அலு வலர்கள் அல்லது அவர் களால் அதிகாரம் அளிக் கப்பட்ட நபர்கள், மனுக் களை பெற்று, எழுத்து மூலம் ஒப்புகை தர வேண் டும்.
இதற்காக, பிரிவு அலுவ லகங்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களி லும், பதிவேடு பராமரிக்க வேண்டும். இணைப்பை இடமாற்றுதல், மின்சார தடை, பெயர் மாற்றம், கட் டணப் பிரிவு மாற்றம், கட் டணப் பிரச்னை, தற்காலிக இணைப்பு, வோல்டேஜ் பிரச்னை, வைப்பு நிதி திரும்பப் பெறுதல் மற்றும் அனைத்து வகை மின் நுகர்வு பிரச்னைகளுக்கு மனுக்கள் தரலாம்.
நிவர்த்தி செய்வதற்கான காலக்கெடு:
தாழ்வழுத்தம் 30 நாட் களில், உயரழுத்தம் 60 நாட்கள்; டிரான்ஸ்பார்மர் அல்லாத நீட்டிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணி: தாழ் வழுத்தம் 90 நாட்கள், உயர ழுத்தம் 120 நாட்கள்; டிரான்ஸ்பார்மருடன் கூடிய நீட்டிப்பு, மேம் பாட்டு பணி: தாழ்வழுத்தம் 90 நாட்கள், உயரழுத்தம் 180 நாட்கள். மீட்டர் அல்லது இணைப்பு இட மாற்றம்: 25 நாட்கள்;
மின்தடம் மாற்றுதல்: 60 நாட்கள்; டிரான்ஸ்பார்மர் இடமாற்றம்: 90 நாட்கள்; மீட்டர் புதுப்பித்தல்: 30 நாட்கள்; கட்டண வகை மாற்றம்: 7 நாட்கள்; பெயர் மாற்றம்: 7 நாட்கள்; கட் டண கணக்கு பிழை திருத் தம்: பணம் செலுத்தும் இறுதி நாட்களுக்குள், குறை களை தீர்க்க வேண் டும்.
இவ்வாறு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அறிவிக்கப் படாத மின்வெட்டு, மின் தடை பிரச்னைகளை தீர்க்க, மணிக்கணக்கில் காலக்கெடு விதிக்கப் பட்டுள்ளது. இந்த குறிப் பிட்ட கெடுக்குள் குறை களை தீர்க்கத் தவறினால், மின்வாரியத்தில் இருந்து, நுகர்வோருக்கு நிவாரணம் தர வேண்டும்.
பிரிவு அலுவலகங்கள், குறைகளை தீர்க்க தவறும் போதும், நிவாரணத்திலும் திருப்தி அடையாத நுகர் வோர், அந்தந்த பகுதி மின் வாரிய கண்காணிப்பு பொறியாளர் அலுவல கத்தில் உள்ள குறைதீர்ப்பு மையத்தில் முறையிடலாம். இந்த மையங்கள் குறித்து அலுவலக முகவரி, தொலைபேசி எண், மின் னஞ்சல் (இ-மெயில்) உள் ளிட்ட விவரங்களை, Buy Ampicillin மின் வாரிய இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
குறை தீர்ப்பகத்தின் உத்தரவை மேல்முறையீடு செய்ய விரும்புவோர், சென்னை எழும்பூரில் உள்ள, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தின் குறை தீர்ப்பாயத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தகவல்,
க.கா.செ.
கடையநல்லூர்

Add Comment