வீடியோ கான்பரன்சிங்’ மூலம் விசாரணை* லலித் மோடி புது யோசனை

என் மீது சுமத்தப்பட்டுள்ள புகார்களுக்கு “வீடியோ கான்பரன்சிங்’ மூலம் பதிலளிக்க தயாராக உள்ளேன். இல்லாவிட்டால், லண்டனுக்கு வாருங்கள், அதற்கான விமானப் போக்குவரத்துச் செலவை நான் பார்த்துக் கொள்கிறேன்,” என, அமலாக்கப் பிரிவினருக்கு மோடி யோசனை தெரிவித்துள்ளார்.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) அமைப்பின் முன்னாள் தலைவர் லலித் மோடி. ஐ.பி.எல்., அணிகளை ஏலத்தில் எடுத்தது, ஒளிபரப்பு உரிமை வழங்கியது உள்ளிட்டவற்றில் மோடி மீது ஊழல் புகார் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மோடியை அதிரடியாக பதவி நீக்கம் செய்தது இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,). இந்நிலையில், அமலாக்கப்பிரிவினர் இவர் மீது விசாரணை நடத்தி வருகின்றன. ஆனால் லலித் மோடி இந்தியாவுக்கு வராமல், லண்டனில் தங்கியுள்ளார். இதனால், மோடியின் பாஸ்போர்ட்டை திரும்ப பெறுமாறு, வெளியுறவுத் துறையிடம், அமலாக்கப்பிரிவினர் தெரிவித்தனர். இது குறித்து பதிலளிக்குமாறு மோடிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்க நாளை (அக். 28) கடைசி நாள். இந்நிலையில், அமலாக்கப்பரிவினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக மோடி தெரிவித்துள்ளார். இருப்பினும் Levitra online புது யோசனை அளித்துள்ளார்.

இது குறித்து மோடியின் வழக்கறிஞரான அப்தி கூறுகையில்,”” அமலாக்கப்பரிவினரின் விசாரணைக்கு பதிலளிக்க மோடி தயாராக உள்ளார். ஆனால் மும்பையில் மோடியின் உயிருக்கு ஆபத்து உள்ளது. இதை மும்பை போலீசாரும் நன்கு அறிவர். இதனால் “வீடியோ கான்பரன்சிங்’ மூலம் விசாரணை நடத்த வேண்டும் என மோடி விரும்புகிறார். இதற்கு சட்டத்தில் இடம் உள்ளது. இல்லாவிட்டால், லண்டன் வந்து விசாரணை நடத்தலாம். இதற்கான விமானப் போக்குவரத்து செலவை தான் ஏற்றுக் கொள்வதாகவும் மோடி தெரிவித்துள்ளார்,” என்றார். இதனிடையே மோடிக்கு எதிரான ஆதாரங்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

Add Comment