கொச்சி அணிக்கு கவாஸ்கர் உதவி?

உரிமையாளர் பிரச்னையில் சிக்கிய கொச்சி அணியின் தலைவிதி இன்று நிர்ணயிக்கப்பட Buy Ampicillin உள்ளது. இதனிடையே கொச்சி அணிக்கு, முன்னாள் இந்திய அணி கேப்டன் கவாஸ்கர் உதவ முன்வந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

கடந்த 2008ல் இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) சார்பில் இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்.,) அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. ஐ.பி.எல்., “டுவென்டி-20′ போட்டிகள் ஆண்டு தோறும் வெற்றிகரமாக நடந்து வருகிறது. இதில், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் இது வரை பங்கேற்றன. அடுத்து ஆண்டு கொச்சி மற்றும் புனே அணிகளை சேர்த்து மொத்தம் 10 அணிகள் பங்கேற்க விருந்தன.

கொச்சி அணி சர்ச்சை: இந்நிலையில், உரிமையாளர்கள குறித்து சரியான தகவலை தெரிவிக்காத ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளின் உரிமையை இந்திய கிரிக்கெட் போர்டு கடந்த 10 ம் தேதி அதிரடியாக ரத்து செய்தது. தவிர, புதிதாக இணைக்கப்பட்ட கொச்சி அணிக்கும், முறையான தகவல்களை தெரிவிக்குமாறு காலக்கெடு விதித்தது. கொச்சி அணியை “ரெண்டஸ்வஸ்’ நிறுவனம் 1, 530 கோடிக்கு வாங்கியது. இங்கு தான் பிரச்னை ஆரம்பமானது. கொச்சி அணியின் பங்குகள் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் மற்றும் ஐ.பி.எல்., தலைவராக இருந்த லலித் மோடி இடையே மோதல் ஏற்பட்டது. இப்பிரச்னை பெரிதாக, லலித் மோடி மீது ஊழல் குற்றம்சாட்டப்பட்டு “சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.

காலக்கெடு முடிவு: கொச்சி அணியின் பங்குகள் மற்றும் உரிமையாளர்கள் குறித்து தகவல் அளிக்க, பி.சி.சி.ஐ., 10 நாட்கள் கெடு விதித்திருந்தது. இந்தக் காலமும் முடிந்து விட்டது. இந்நிலையில், கொச்சி அணியின் தலைவிதியை நிர்ணயிக்க, ஐ.பி.எல்., நிர்வாகக் குழு கூட்டம் இன்று நாக்பூரில் கூடுகிறது. இதனிடையே தங்கள் அணியில் ஏற்பட்ட பிரச்னைகளை தீர்க்க கூடுதலாக கால அவகாசம் தரும் படி, பி.சி.சி.ஐ., யிடம் கொச்சி அணியின் உரிமையாளர்களில் ஒருவரான கெய்க்வாட் அனுமதி கேட்டுள்ளார்.

கவாஸ்கர் உதவி: இந்நிலையில், முன்னாள் இந்திய அணி கேப்டன் சுனில் கவாஸ்கரின் உதவியை நாடியுள்ளது கொச்சி அணி நிர்வாகம். இது குறித்து கெய்க்வாட் கூறுகையில்,””எங்கள் அணியின் உள்கட்ட பிரச்னைகளை தீர்க்க, கவாஸ்கரின் உதவியை நாடினோம். அவரும் ஆலோசகராக பணியாற்ற சம்மதம் தெரிவித்துள்ளார். ஐ.பி.எல்.,நிர்வாகக் குழுவில் உறுப்பினராக இருந்த அவர், தற்போது அப்பதவியிலிருந்து விலகி விட்டார். இதனால் தான் அவரது உதவியை நாடினோம். ஆனால் அணியின் பங்குகளில் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை,” என்றார்.

உறுதி இல்லை: கொச்சி அணிக்கு உதவுவது குறித்து கவாஸ்கர் கூறியது: உரிமையாளர் பிரச்னையில் சிக்கிய கொச்சி அணி நிர்வாகத்தினர், என்னை ஒரு முறை தொடர்பு கொண்டு பேசினர். அவர்களுக்கு வழிகாட்டுமாறு தெரிவித்தனர். ஆனால் இது குறித்து நான் இதுவரை எந்த உறுதியும் அளிக்க வில்லை. தவிர, கொச்சி அணியின் பங்குகளில் எனக்கு தொடர்பு இல்லை. இவ்வாறு கவாஸ்கர் தெரிவித்தார்.

Add Comment