செஸ்: ஆனந்த் வெற்றி

பெர்ல் ஸ்பிரிங் செஸ்’ தொடரின் ஆறாவது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆன்ந்த் வெற்றி பெற்றார்.

சீனாவின் நான்ஜிங்கில் உலகின் 6 முன்னணி வீரர்கள் பங்கேற்கும் “ரவுண்ட் -ராபின்’ முறையிலான “பெர்ல் ஸ்பிரிங் செஸ்’ தொடர் நடக்கிறது. மொத்தம் 10 சுற்றுகள் கொண்ட இத்தொடரின், முதல் 5 சுற்று போட்டிகளின் முடிவில் ஆனந்த் 2.5 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருந்தார்.

buy Levitra online justify;”>இதனிடையே ஆறாவது சுற்று ஆட்டம் நேற்று நடந்தது. இதில், உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், சீனாவின் வாங் யூவை சந்தித்தார். இம்முறை கருப்பு நிற காய்களுடன் விளையாடிய ஆனந்த், துவக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். வாங் யூ செய்த சில தவறுகளை பயன்படுத்திக் கொண்ட ஆனந்த், 51 வது நகர்த்தலில் அசத்தல் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன், பிரான்சின் எடினே பாக்ரோட் இடையிலான பரபரப்பான போட்டி “டிரா’ ஆனது. அசர்பைஜான் வீரர் உகர் காஷிமோவ், பல்கேரியாவின் வேசலின் தபாலோவ் இடையிலான ஆட்டமும் “டிரா’ வில் முடிந்தது.

ஆறு சுற்றுகளின் முடிவில் ஆனந்த் 3.5 புள்ளிகளுடன் தொடர்ந்து 3 வது இடத்தில் உள்ளார். மேக்னஸ் கார்ல்சன் 4.5, எடினே பாக்ரோட் 4 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் உள்ளனர். 2.5 புள்ளிகளுடன் உள்ள காஷிமோவ் நான்காவது இடத்திலும், அடுத்த இரு இடத்தில் தபாலோவ் (2), வாங் யூ (1.5) ஆகியோர் உள்ளனர்.

Add Comment