மிகவும் வியப்பாக உள்ளது* சச்சின் பெருமிதம்

உலக லெவன் டெஸ்ட் அணியில் பிராட்மேனுடன், என்னையும் சேர்த்து இருப்பதை நம்பவே முடியவில்லை. அதிக வியப்பை தரும் இது மிகவும் சிறப்பு வாய்ந்தது,” என, இந்திய கிரிக்கெட்டின் பேட்டிங் மாஸ்டர் சச்சின் Bactrim online பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் அரங்கில் சிறந்து விளங்கிய 11 டெஸ்ட் வீரர்களின் பட்டியலை, ஈ.எஸ்.பி.என்., “கிரிக்கின்போ’ இணையதளம் வெளியிட்டது. இதில் நான்கு ஆஸ்திரேலிய வீரர்கள், மூன்று வெஸ்ட் இண்டீஸ், இரண்டு இங்கிலாந்து, மற்றும் ஒரு பாகிஸ்தான் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். தற்போதுள்ள வீரர்களில் இந்தியாவின் சச்சின் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

மற்றபடி, ஆஸ்திரேலியாவின் பாண்டிங்,மெக்ராத், வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா, இந்தியாவின் கபில் தேவ், கவாஸ்கர் ஆகியோருக்கு இடம் கிடைக்க வில்லை. இந்நிலையில் டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக 14 ஆயிரம் ரன்களை கடந்து, 50 சதத்தை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை விரைவில் படைக்க காத்திருக்கும் சச்சின் (37), உலக லெவன் அணி குறித்து கூறியது:

கிரிக்கெட் ஜாம்பவான்கள் நிறைந்த ஒரு கனவு அணியில் விளையாடுவது என்பது, மிகப்பெரிய வாய்ப்பு ஆகும். டெஸ்ட் போட்டியின் உணவு இடைவேளைக்குப் பின் பிராட்மேனுடன் இணைந்து களமிறங்குவது அல்லது விவியன் ரிச்சர்ட்சுடன் சேர்ந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைப்பது, கேரி சோபர்சுடன் இணைந்து கிரிக்கெட் குறித்து விவாதிப்பது போன்ற வித்தியாசமான அனுபவங்கள் இதில் கிடைக்கும். இதுபோல மற்ற வீரர்களுடன் இணைந்து கிரிக்கெட் குறித்து உரையாடலாம். ஜேக் ஹாப்ஸ், லென் ஹட்டன் போன்ற வீரர்கள், தங்களது காலத்தில் எதிர்கொண்ட சிறப்பான பவுலர்கள் மற்றும் கிரிக்கெட் தன்மைகள் குறித்தும் தெரிவிக்குமாறு கேட்கலாம்.

வியப்பு தருகிறது:இதற்குமுன் நான் மால்கம் மார்ஷலுடன் கவுன்டி போட்டியில் பங்கேற்றுள்ளேன். ரிச்சர்சுடன் கண்காட்சி போட்டியில் விளையாடியுள்ளேன். என்னுடைய 12 வயதில் முதன் முதலாக டென்னிஸ் லில்லியை சந்தித்துள்ளேன். பின் 15 வயதில் எம்.ஆர்.எப்., பவுண்டேசனில் இருந்த போது, டென்னிஸ் லில்லி, எனக்கு பவுலிங் செய்துள்ளார். இது மிகவும் “திரில்லான’ அனுபவம் ஆகும். இப்போது இவர்கள் எல்லாம் உள்ள அணியில் நானும் இணைந்திருப்பது போன்றது மிகவும் கற்பனையான, வியப்பான அனுபவத்தை தருகிறது.
இவ்வாறு சச்சின் தெரிவித்தார்.

அக்ரம் மகிழ்ச்சி:அணியில் இடம் பெற்றது குறித்து பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் கூறியது:பாகிஸ்தான் அணிக்காக விளையாடுவேன் என, எப்போதும் நான் நினைத்ததில்லை. இந்நிலையில் பாகிஸ்தானில் இருந்து உலகலெவன் அணியில் நான் மட்டும் இடம்பெற்றிருப்பது மிகவும் “ஸ்பெஷலான’ அனுபவம். இதே அணியில் பிராட்மேன், கேரி சோபர்ஸ், ரிச்சர்ட்ஸ், சச்சின் போன்றவர்களையும் தேர்வு செய்திருப்பது பெருமையாக உள்ளது.

நான் பார்த்ததில் இம்ரான் கான் சிறந்த பவுலர் என்பதில் சந்தேகம் இல்லை. அதேபோல, டென்னிஸ் லில்லியும் அசத்தலான பவுலர் தான். ஆனால் இங்கிலாந்து, இந்திய துணைக்கண்டம் மற்றும் ஆஸ்திரேலியா என உலகின் பல இடங்களிலும் சிறப்பாக செயல்பட்ட மால்கம் மார்ஷல் தான் என்னைப் பொறுத்தவரையில் சிறப்பான பவுலர் என நினைக்கிறேன். இவ்வாறு வாசிம் அக்ரம் கூறினார்.

இதேபோல உலகலெவன் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் கூறுகையில்,”” கனவு அணியில் நான்கு ஆஸ்திரேலிய வீரர்கள் இடம் பெற்றுள்ளது பெருமையாக உள்ளது,” என்றார்.

Add Comment