தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும்

தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என மனித உரிமைகள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. மனித உரிமைகள் கழக மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் தென்காசி வர்த்தக சங்க கட்டடத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் முருகையா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பழனி, தென்காசி நகர தலைவர் முகைதீன் பிச்சை, ஒன்றிய செயலாளர் கோமதிநாயகம், செங்கோட்டை நகர செயலாளர் தாமஸ், ஒன்றிய தலைவர் அந்தோணி, கீழப்பாவூர் ஒன்றிய தலைவர் அருள் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் கணேசன் வரவேற்றார்.

மண்டல தலைவர் அற்புதராஜ், ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், சட்ட ஆலோசகர் நாராயணசாமி, கீழப்பாவூர் ஒன்றி செயலாளர் குமார், செங்கோட்டை நகர செயலாளர் செந்தில் ஆறுமுகம், நகர மக்கள் தொடர்பு அலுவலர் குத்தாலிங்கம், துணைத் தலைவர் ஐயப்பன், வர்த்தக பிரிவு தலைவர்கள் கருப்பசாமி, ஹபிரூஸ் ரிபாய், செயலாளர் சாரா சலீம், ஒன்றிய துணைத் தலைவர் மாரியப்பன், ஒன்றிய இளைஞரணி தலைவர் முருகேசன், செயலாளர் திபஹார், நகர ஒருங்கிணைப்பாளர் கோதரி, நகர இணை செயலாளர் நாகூர் மீரான் மற்றும் பலர் பேசினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தென்காசியில் ரயில்வே மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அரசின் நிர்வாக வசதிக்காகவும், மக்களின் வளர்ச்சிக்காகவும் தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும். கடையம் ராமநதி அணையை தூர்வார வேண்டும். தென்காசி அம்மன் சன்னதியில் உள்ள டாஸ்மாக் கடையை இடம் மாற்றம் செய்ய வேண்டும். தென்காசியை சுற்றியுள்ள நன்செய், புன்செய் நிலங்களில் வீடு மற்றும் கட்டடங்கள் கட்ட தடை விதிக்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சிகளை மாவட்ட புகைப்பட அணி அமைப்பாளர் செய்யது கனி தொகுத்து வழங்கினார். கூட்டத்தில் சேரன்மகாதேவி ஒன்றிய செயலாளர் முருகன், புதூர் அமைப்பாளர் சாகுல் கமீது, ஒன்றிய மகளிரணி தலைவி பட்டம்மாள், செயலாளர் காமாட்சி, பாவூர்சத்திரம் செயலாளர் பிரகாசம், இணை செயலாளர் சங்கர், துணை செயலாளர் செந்தில் குமரன், சுரண்டை செயலாளர் ராஜன், ஒருங்கிணைப்பாளர் பரமசிவன், இந்திரா, குலசேகரி, அழகுராஜ், நாகூர்மீரான், முருகராஜ், சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட மக்கள் Buy Amoxil தொடர்பு அலுவலர் பாக்கியமுத்து கென்னடி நன்றி கூறினார்.

Add Comment