ஐந்தருவி படகு குழாம் பகுதியில்ரூ.54 லட்சத்தில் மேம்பாட்டு பணிகள்

குற்றாலம் ஐந்தருவி படகு குழாம் பகுதியில் 54 லட்சம் ரூபாய் செலவில் மேம்பாட்டு பணிகள் நடந்துள்ளன.”ஏழைகளின் ஊட்டி’ என்று அழைக்கப்படும் குற்றாலத்தில் ஆண்டுதோறும் சீசன் ஜூன் மாதம் துவங்கி செப்டம்பர் முதல் வாரம் வரை நீடிக்கும். கடந்த சில ஆண்டுகளாக அருவிகளில் தண்ணீர் விழும் காலம் அதிகரித்துள்ளது. தற்போது கூட அருவிகளில் மிதமான தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகளின் வருகை பரவலாக காணப்படுகிறது. ஆண்டுதோறும் குற்றாலத்திற்கு பல லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.கடந்த Buy Levitra ஆண்டு மட்டும் சுற்றுலா பயணிகளின் வருகை 25 லட்சத்தையும் தாண்டியது. குற்றாலத்தில் உள்ள அருவிகள், இயற்கை சூழ்நிலை, சீசன் காலத்தில் நிலவும் பருவ நிலை இந்திய சுற்றுலா பயணிகளை மட்டும் அல்லாது வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளையும் கவர்ந்துள்ளது.

குற்றாலத்திற்கு ஆண்டுதோறும் மாநில அரசு பல லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும். கடந்த ஆண்டு மத்திய சுற்றுலாத்துறை சார்பில் 4 கோடியே 62 லட்சம் ரூபாய் குற்றாலத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் பல்வேறு பணிகள் நடந்துள்ளன. சுற்றுலா பயணிகளின் பொழுதுபோக்கு வசதிக்காக பூங்காக்கள் சீரமைக்கப்பட்டன. புதிய பூங்கா அமைக்கப்பட்டது. சுற்றுலாத்துறை தகவல் மையம் அமைக்கப்பட்டது.சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ள ஐந்தருவி படகு குழாம் சீரமைப்பிற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. படகு குழாம் ஆழப்படுத்தப்பட்டது. அதன் கரைகள் பலப்படுத்தப்பட்டது. கரையின் மேல் பகுதியில் சுற்றுலா பயணிகள் நடந்து சென்று இயற்கை அழகை ரசிக்கும் வகையில் நவீன நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பது போல் உள்ளது.
படகு குழாம் கரை பகுதியில் ஏறி செல்வதற்காக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு இருபுறமும் ஒட்டக சிவிங்கி சிலை அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று நடமேடை துவங்கும் பகுதியில் சிங்கம் சிலை சுற்றுலா பயணிகளை சிலிர்க்க வைக்கிறது. 54 லட்சம் ரூபாய் செலவில் படகு குழாம் பகுதியில் மேம்படுத்தும் பணி நடந்துள்ளது. இப்பணிகள் இன்னும் சில நாட்களில் நிறைவு பெறும்.

Add Comment