10 தொகுதிகளில் 18.99 லட்சம் வாக்காளர்கள்; பெண்கள் அதிகம்பெயர் சேர்த்தல், திருத்தம்

நெல்லை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகளில் 18.99 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ளனர். பெயர் சேர்த்தல், நீக்கலுக்கு வரும் நவம்பர் மாதம் 9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.நெல்லை மாவட்டத்தில் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 9 லட்சத்து 47 ஆயிரத்து 428 ஆண் வாக்காளர்கள், 9 லட்சத்து 52 ஆரத்து 282 பெண் வாக்காளர்கள் உட்பட மொத்தம் 18 லட்சத்து 99 ஆயிரத்து 710 வாக்காளர்கள் உள்ளனர்.வரைவு வாக்காளர் பட்டியல் ஆர்.டி.ஓ, தாலுகா, மாநகராட்சி உதவி ஆணையர் அலுவலகங்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட ஓட்டுச்சாவடிகளில் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் தங்களுடைய பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை நேரில் பார்த்து சென்று பார்த்து, விடுபட்டு இருப்பின் பெயர்களை சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய படிவங்களை பொதுமக்கள் தீதீதீ.மநமயாடவஙற.õங.கவö.டங என்ற வெப்சைட்டில் பெற்று கொள்ளலாம்.
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க படிவம் 6, நீக்கம் செய்ய படிவம் 7, திருத்தம் செய்ய படிவம் 8 மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்கள் ஆர்.டி.ஓ, தாசில்தார், மாநகராட்சி உதவி ஆணையர் அலுவலகங்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட ஓட்டுச்சாவடிகளிலும் வரும் நவம்பர் மாதம் 9ம் தேதி வரை பெறப்படும்.வரும் 30ம் தேதி மற்றும் நவம்பர் மாதம் 7ம் தேதி ஆகிய விடுமுறை நாட்களில் இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிராம சபை, குடியிருப்போர் சங்கங்களின் கூட்டங்கள் நடத்துதல், உரிய பகுதிக்குரிய வாக்காளர் பட்டியல் வாசித்தல் மற்றும் பெயர் சரி பார்த்தல் பணிகள் வரும் 30ம் Cialis No Prescription தேதி மற்றும் நவம்பர் மாதம் 2ம் தேதகிளில் நடக்கிறது.ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களின் தல விசாரணை வரும் நவம்பர் மாதம் 30ம் தேதி முடிக்கப்பட்டு வரும் டிசம்பர் மாதம் 21ம் தேதி வாக்காளர் பதிவு அலுவலர் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் தேதி வெளியிடப்படுகிறது.படிவம் 6ஐ பூர்த்தி செய்ய விண்ணப்பதாரர்களுக்கு சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடி அலுவலர்கள் உதவி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 1.1.2011 அன்று 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். வயது ஆதாரம், இருப்பிட ஆதாரம் இணைத்து மனு அளிக்க வேண்டும். படிவங்கள் பெறப்படும் நாட்களில் பணியில் இல்லாத பணியாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப் பணிக்கு நெல்லை மாவட்டத்தில் நல்ல முறையில் செய்து முடிக்க அனைத்து அரசியல் கட்சிகள், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கலெக்டர் ஜெயராமன் தெரிவித்தார்.வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கூட்டத்தில் அதிகாரிகள் டி.ஆர்.ஓ ரமண சரஸ்வதி, சேரன்மகாதேவி சப்-கலெக்டர் வீரராகவராவ், மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜெய் சேவியர், நெல்லை ஆர்.டி.ஓ தமிழ்செல்வி, தென்காசி ஆர்.டி.ஓ சேதுராமன், பி.ஆர்.ஓ ரவீந்திரன், அனைத்து தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், கட்சி நிர்வாகிகள் காங்., சுந்தரராஜ பெருமாள், திமுக துரை, அதிமுக பாப்புலர் முத்தையா, பா.ஜ பாலசுப்பிரமணியன், பா.ம.க ரமேஷ்பாபு, இந்திய கம்யூ., நாராயணன், பகுஜன் சமாஜ் கட்சி தேவேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Add Comment