எகிப்து:முதல் கட்ட தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியீடு: இஸ்லாமிய கட்சிகளுக்கு 65 சதவீத வாக்குகள்

buy Bactrim online alt=”imagesCA6F7631″ width=”186″ height=”139″ />

கெய்ரோ:எகிப்தில் நடந்த பாராளுமன்றத்திற்கான முதல் கட்ட தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் இஸ்லாமிய கட்சிகள் 65 சதவீத வாக்குகளை பெற்றுள்ளன. இஃவானுல் முஸ்லிமீனின் அரசியல் பிரிவான எஃப்.ஜே.பி 36.6 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. மற்றொரு இஸ்லாமிய கட்சியான அந்நூர்(ஸலஃபி) 24.36 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.

தாராளமய கொள்கைவாதிகளான அல்வஸ்தாவுக்கு 4.27 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. இத்தகவலை தேர்தல் கமிட்டி பொதுச்செயலாளர் யுஸ்ரி அப்துல் கரீம் தெரிவித்துள்ளார்.

பதிவான 97 லட்சத்து 30 ஆயிரம் வாக்குகளில் எஃப்.ஜே.பி 35 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளது. அந்நூர் கட்சி 23 லட்சத்து 70 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளது. அல் வஸத் கட்சி 4 லட்சத்து 10 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளது.

ஜனவரி மாதம் நடைபெறும் 3-வது கட்ட தேர்தலும் முடிந்த பிறகே இறுதி முடிவுகளை அறிய இயலும். முதல் கட்ட தேர்தலின் முடிவுகள் அடுத்த கட்ட தேர்தல்களில் முக்கிய காரணியாக விளங்கும். இம்மாதம் இறுதியிலும், ஜனவரி 10-ஆம் தேதியும் நடைபெறும் அடுத்த கட்ட தேர்தல்களின் முடிவில் இஸ்லாமிய கட்சிகள் 3-இல் 2 பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என ராய்ட்டர்ஸ் கூறுகிறது.

ஜனநாயகரீதியில்தான் தேர்தல் நடைபெற்றுள்ளது என்பதற்கான நிரூபணம்தான் இஸ்லாமிய கட்சிகளின் வெற்றி என அதிபர் தேர்தலில் போட்டியிடவிருக்கும் முன்னாள் அரப் லீக்கின் பொதுச்செயலாளர் அம்ர் மூஸா தெரிவித்துள்ளார்.

Add Comment