கஷ்மீர்:கிறிஸ்தவ மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்ய கடத்திய 28 சிறுவர்கள் மீட்பு

ஜம்மு கஷ்மீர் மாநிலம் லேயிலிருந்து அரசு சார அமைப்பு ஒன்றின் பணியாளர்களால் கடத்திச் செல்லப்பட்ட 28 குழந்தைகளை போலீஸ் ஜம்முவில் வைத்து மீட்டது.

ஆறு அரசு சாரா அமைப்பின் உறுப்பினர்களை போலீஸ் கைதுச் செய்தது. 14 வயதிற்கு கீழே உள்ள சிறுவர்களைத்தான் இவர்கள் கடத்திச் சென்றுள்ளனர். இச்சிறுவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றவேண்டும் என்ற நோக்கத்தில் கடத்திச் சென்றதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நகரத்தின் தோக்ரஹார் பகுதியில் ‘சுனேஹரா’ என்ற அரசு சாரா அமைப்பு வாடகைக்கு எடுத்து நடத்திவரும் ஹாஸ்டலில் போலீசார் ரெய்டு நடத்திய பொழுதுதான் 24 ஆண் குழந்தைகளையும், 4 பெண் குழந்தைகளையும் கடத்தி வைத்திருப்பது தெரியவந்தது.

சுனேஹரா அமைப்பின் தலைவர் விகாஸ் சர்மா, ரஞ்சன் சர்மா, புவா டேவிட், சுக்தேவ் மாசிஹ், கங்கன் தீப் சிங் (பொதுச்செயலாளர்) அவருடைய மனைவி மீனாட்சி (செயலாளர்) ஆகியோர் கைதுச் செய்யப்பட்டனர்.

லேயில் Viagra No Prescription சமீபத்தில் நடந்த வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறோம் என்ற போர்வையில் வந்த இந்த அமைப்பினர் சிறுவர்,சிறுமிகளை வலுக்கட்டாயமாக ஜம்முவிற்கு கடத்திச் சென்றுள்ளனர்.

தங்களின் அனுமதியில்லாமல் சிறுவர், சிறுமிகளை ஜம்முவிற்கு கடத்திச் சென்றதாக அவர்களின் பாதுகாவலர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Add Comment