பஹ்ரைன்:முதல் கட்ட தேர்தலில் ஷியா ஆதரவுக கட்சி அதிக இடங்களில் வெற்றி

அதிகமான முறைக் கேடுகள் நடந்ததாக குற்றஞ்சாட்டப்படும் பஹ்ரைன் நாட்டின் முதல் கட்ட பாராளுமன்றத் Doxycycline No Prescription தேர்தலில் ஷியா கட்டுப்பாட்டிலுள்ள கட்சியான இஸ்லாமிக் நேசனல் அக்கார்ட் அசோசியேசன்(ஐ.என்.எ.எ) அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.

முதல் கட்ட தேர்தல் நடைப்பெற்ற 40 இடங்களில் 18 இடங்களை இக்கட்சி வெற்றிப் பெற்றுள்ளது. இந்த மாதம் 30-ஆம் தேதி ஒன்பது இடங்களுக்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் தலைவர் அப்துல்லா அல் புஅய்னயின் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியலிருந்து சட்ட விரோதமாக வாக்காளர்களின் பெயர்களை நீக்கம் செய்ததில் தங்களுடைய 890 வாக்காளர்களுக்கு வாக்களிக்க இயலவில்லை என ஐ.என்.எ.எ தலைவர் தெரிவித்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் பாராளுமன்றத்தில் தங்களின் செல்வாக்கை அதிகரிக்க இக்கட்சியால் முடிந்துள்ளது.

சர்வதேச பார்வையாளர்களை நியமிப்பதற்கு அனுமதியில்லாததால் அரசுசாரா அமைப்புகளிலிருந்து 292 பார்வையாளர்கள் கட்டுப்பாட்டில் தேர்தல் நடைப்பெற்றது.

தேர்தலையொட்டி வன்முறை எழுவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்று கருதி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கடந்த 2006 ஆம் ஆண்டு பஹ்ரைனில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் சன்னி ஆதரவுக் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியிருந்தது. அப்பொழுதும், முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

Add Comment