ஈராக்கில் காணக்கொடூரமான தாக்குதல்களை அமெரிக்க ராணுவம் நடத்தியுள்ளது – விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியா அஸன்ஜா

ஈராக்கில் கர்ணக்கொடூரமான தாக்குதல்களை ராணுவம் நடத்தியதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன என்று விக்கிலீக்ஸின் ஸ்தாபகர் ஜூலியா அஸன்ஜா தெரிவிக்கிறார்.

ஈராக்கில் போர் குற்றம் நடைப்பெற்றுள்ளது என்பதற்கான தெளிவான ஆதாரம் இது என லண்டனில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இதனை அவர் தெரிவித்தார்.

அதேவேளையில், ஆவணங்களை வெளியிட்ட நடவடிக்கையை அமெரிக்க ஜாயிண்ட் ஸ்டாஃப் சீஃப் சேர்மன் கண்டித்துள்ளார்.

அமெரிக்க ராணுவத்தின் செக்போஸ்டுகளில் சிக்கிய 700க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளான பெண்களையும், குழந்தைகளையும் உள்ளடக்கிய அப்பாவி மக்களை அநியாயமாக அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது என்பதை நேற்று முன்தினம் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

Buy Bactrim Online No Prescription justify;”>இதற்கிடையே, ஈராக்குடன் தொடர்புடைய அமெரிக்க தலைமையிலான ராணுவத்தின் ரகசிய ஆவணங்களிலுள்ள குற்றச்சாட்டுகள் மிகக் கடுமையானவை என பிரிட்டனின் துணை பிரதமர் நிக் க்ளக் தெரிவித்துள்ளார்.

ஆவணங்களில் கூறப்படும் விஷயங்களில் தொடர்புடையவர்களின் பதிலுக்காக மக்கள் காத்திருப்பதாகவும் தெரிவித்த நிக் க்ளக் 2003 ஆம் ஆண்டு அமெரிக்க ஆக்கிரமிப்பில் பங்கெடுப்பதற்கு அன்றைய பிரிட்டன் பிரதமர் டோனி ப்ளேயரின் தீர்மானம் சட்டவிரோதமானது எனத் தெரிவித்துள்ளார்.

Add Comment