மணிக்கு 500 கி.மீ., செல்லும் அதிவேக ரயில் தயாரிப்பு:சீனா புயல் வேகம்

சீனாவின் அதிவேக ‘புல்லட்’ ரயில்கள் உலக பிரபலம். இந்த வரிசையில், மணிக்கு 500 கி.மீ., வேகம் (சிறு ரக விமானங்கள் போல) செல்லும் ரயில்களை சீன ரயில்வே உருவாக்கியுள்ளது.இதுகுறித்து சீன ரயில்வேயின் தலைமைப் பொறியாளர் ஹே ஹூவாவ் கூறியதாவது: மணிக்கு 500 கி.மீ., வேக ரயிலை வடிவமைக்கும் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. அதற்கடுத்து, பீஜிங், ஷாங்காய் நகரங்களுக்கு இடையில் உள்ள ரயில் பாதையில், ‘சோதனை ஓட்டம்’ நடத்தப்படும்.

இதற்காக, பீஜிங் – ஷாங்காய்க்கு இடைப்பட்ட 1,318 கி.மீ., தூரத்தில், புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் ரயில் சேவை துவங்கப்படும்.இந்த ரயிலில், பீஜிங்கில் இருந்து ஷாங்காய் செல்ல நான்கு மணிக்கும் குறைவான நேரமே ஆகும். எதிர்காலத்தில், இது இன்னும் 50 ஆயிரம் கி.மீ., நீளத்துக்கு அதிகரிக்கப்படும். ஐந்து லட்சத்துக்கு அதிகமான Buy cheap Cialis மக்கள் தொகையுள்ள நகரங்கள் அனைத்தும் இதில் இணைக்கப்படும்.நடப்பாண்டில், ஏழாயிரத்து 55 கி.மீ., நீளத்துக்கு, அதிவேக ரயில் பாதைகள் அமைக்கும் பணி நடந்துள்ளது. இன்னும், 10,000 கி.மீ., நீளம் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.இவ்வாறு ஹே ஹூவாவ் கூறினார். பேராசிரியர் வாங் மெங்சூ என்பவர் கூறுகையில், ‘எவ்வித தடைகளும் இல்லாமல், அதிவேகத்தில் ஓடும் ரயில்களை தயாரிப்பதில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். ‘சீனாவால் எதையும் சாதிக்க முடியும்’ என்பதை உலகம் தெரிந்து கொள்ள வேண்டும்’ என்றார்.கடந்த மாதத்தில், மணிக்கு 416.6 கி.மீ., செல்லும் ரயிலை ஷாங்காயில் இருந்து ஹாங்ஜோவூ நகர் வரை இயக்கி, சீனா சாதனை படைத்துள்ளது. அதற்கு முன்பு, 2008ம் ஆண்டில் 394.3 கி.மீ., வேகத்தில் செல்லும் ரயிலை, பீஜிங்கில் இருந்து தியான்சென் வரை இயக்கி உலக சாதனை படைத்தது.

Add Comment