தமிழகத்துக்கு காவிரி நீர்-அனைத்துக் கட்சியினருடன் எதியூரப்பா இன்று ஆலோசனை

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவது குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் கர்நாடக முதல்வர்  எதியூரப்பா இன்று ஆலோசனை நடத்துகிறார்.

buy Cialis online style=”text-align: justify;”>தமிழகத்தில் குறித்த காலத்தில் மழை பெய்யாததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்துவிட்டது. இதனால் சம்பா சாகுபடிக்கு நீரைத் திறந்துவிட முடியவில்லை. இதையடுத்து காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக முதல்வருக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்து அவரச கடிதம் அனுப்பியது.

இது தொடர்பாக விவாதிக்க கர்நாடக சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டத்தை எதியூரப்பா இன்று கூட்டியுள்ளார்.

இது குறித்து நிருபர்களிடம் பேசிய எதியூரப்பா, காவிரியில் தண்ணீர் திறந்துவிடும்படி கோரி தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. நீரைத் திறந்துவிடும் முன் கர்நாடகத்தில் காவிரி பாசன பகுதியில் உள்ள அணைக்கட்டுகளில் தண்ணீர் இருப்பு, கர்நாடகத்திற்கு குடிநீர் மற்றும் நீர்ப்பானத்துக்குத் தேவையான தண்ணீர் குறித்து கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.

கர்நாடகத்தின் நலன் பாதிக்கும் வகையில் அரசு செயல்படாது. எனவே தமிழக அரசின் கோரிக்கை பற்றி விவாதிக்க சட்டப்பேரவை அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளேன். தமிழகத்தின் கோரிக்கை குறித்து அக்கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

கர்நாடகத்தின் தேவையை கருத்தில் கொண்டே எந்த முடிவும் எடுக்கப்படும் என்றார்.

அப்போது உடனிருந்த கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறுகையில், சம்பா பயிர் சாகுபடிக்குத் தேவையான தண்ணீர் இல்லாததால் நீரைத் திறந்துவிடுமாறு தமிழகம்  கேட்டுக் கொண்டுள்ளது. நமது தேவைகளைக் கருத்தில் கொண்டு தமிழகத்தின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றார்

Add Comment