கொச்சி ஐபிஎல் அணியை டிஸ்மிஸ் செய்ய ஒப்புதல்-30 நாள் கெடு விதித்து உத்தரவு

கொச்சி ஐபிஎல் அணியை, ஐபிஎல் அமைப்பிலிருந்து நீக்கும் நோட்டீஸை அந்த அணிக்கு அனுப்ப ஐபிஎல் நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது. அதேசமயம், இறுதியாக 30 நாள் அவகாசம் தந்து, அதற்குள் உரிய விளக்கம் தர வாய்ப்பளிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Lasix online style=”text-align: justify;”>இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சஷாங் மனோகர் தலைமையில் இந்தக் கூட்டம் நாக்பூரில் இன்று நடந்தது. கூட்டத்திற்குப் பின்னர் மனோகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கொச்சி அணியின் பிரச்சினை தீர்க்கப்படக் கூடிய ஒன்றுதான். தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளைப் போல சிக்கலான ஒன்று அல்ல. எனவே, கொச்சி அணிக்கு ஒரு மாத கால இறுதி அவகாசம் தர முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இன்றைய கூட்டத்தின் முடிவுப்படி, உங்களது அணியை ஏன் நீக்கக் கூடாது என்று கேட்டு கொச்சி அணிக்கு நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளது. 30 நாட்களுக்குள் பதில் தருமாறுஅதில்உத்தரவிடப்படும். 30 நாட்களுக்குள் பொருத்தமான விளக்கத்தை அந்த அணி தந்தால் தொடர்ந்து நீடிக்கும், இல்லாவிட்டால் கதையை முடித்து கிரிக்கெட் வாரியம் உத்தரவிடும்.

மகாராஷ்டிராவின் சத்யஜித் கெய்க்வாட் குடும்பத்தினருக்குச் சொந்தான ரெண்டஸ்வஸ் ஸ்போர்ட்ஸ் வேர்ட் லிமிட்டெட் நிறுவனத்திற்குச் சொந்தமானதுதான் இந்த கொச்சி ஐபிஎல் அணி. ஆனால் தற்போது அணியின் உரிமையாளர்ளுக்குள் அடிதடி ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இந்த அணியின் அனைத்து விவகாரங்களிலும் மூக்கை நுழைத்து வந்த முன்னாள் வெளியுறவு இணை அமைச்சர் சசி தரூர் தற்போது கழன்று கொண்டு விட்டார். எதிலும் தான் தலையிடப் போவதில்லை என்று அவர் கூறி விட்டார்.

தற்போதைய பிரச்சினை குறித்து சத்யஜித் கெய்க்வாட் கூறுகையில், எங்களுக்கு 30 நாள் அவகாசம் தந்திருப்பதை வரவேற்கிறோம். மகிழ்ச்சி அடைகிறோம். 10 நாள் டைம் தருமாறுதான் கேட்டிருந்தோம். ஆனால் 30 நாட்கள் கிடைத்துள்ளது. அதற்குள் பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என நம்புகிறேன் என்றார்.

கொச்சி அணி ரூ. 1500 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. இந்த அணியின் பங்குதாரர்கள் மொத்தம் 13 பேர் ஆவர். இவர்கள் தற்போது இரு பிரிவாக பிரிந்து நிற்கின்றனர்.

மூக்கை நுழைத்த கவாஸ்கர்!

கொச்சி அணிக்கு வந்த சோதனையைத் தீர்க்க முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தான் உதவத் தயார் என்று நேற்று முன்தினம் அறிவித்தார். இதையடுத்து கவாஸ்கருக்கும் கொச்சி அணியில் பங்கு இருக்குமோ என்ற சர்ச்சை எழுந்தது.

இதையடுத்து நேற்று விளக்கம் அளித்த கவாஸ்கர், எனக்கு கொச்சி அணியில் எந்த பங்கும் இல்லை. மேலும் அணியின் கிரிக்கெட் செயல்பாடுகளைக் கவனிக்கும் குழுவுக்குத் தலைவராக இருக்குமாறு அழைத்தனர். அதையும் நான் ஏற்கவில்லை.

கொச்சி அணிக்கு பிரச்சினையிலிருந்து விடுபடும் எண்ணம் மட்டுமே எனக்கு உள்ளது. எதிர்காலத்தில் அணி தனது பிரச்சினைகளை சுமூகமாக முடித்துக் கொண்டால் மட்டுமே அதனுடன் இணைந்து செயல்படுவது குறித்து யோசிப்பேன் என்றார்.

Add Comment