அபுதாபியில் ந‌டைபெற்ற‌ கிரிக்கெட் போட்டியில் ஏடிஎஃப்சி அணி வெற்றி

அபுதாபியில் ந‌டைபெற்ற‌ கிரிக்கெட் போட்டியில் ஏடிஎஃப்சி அணி வெற்றி

அபுதாபி : அபுதாபி மேலப்பாளையம் மெம்பெர்ஸ் கிளப் ந‌ட‌த்திய‌ இரண்டாவது ரமலான் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்ட‌ம் நேஷ‌ன‌ல் ட‌வ‌ர் ஸ்டேடிய‌த்தில் 18.11.2011 வெள்ளிக்கிழ‌மை ந‌டைபெற்ற‌து.

இப்போட்டிக‌ளில் ஆறு அணிகள் பங்கேற்றன. ஏ பிரிவில் அபுதாபி ஸ்டார், பிரேவ்ஸ் ப‌ட்டாலிய‌ன், ஈடிஏ மெல்கோ ஆகிய மூன்று அணிக‌ளும், பி பிரிவில் பைட்ட‌ர்ஸ் 11, ஏடிஎஃப்சி, எம்.எம்.சி.சி. ஆகிய் மூன்று அணிகளும் பங்கேற்றன.

க‌ட‌ந்த‌ இரு மாத‌ங்க‌ளாக‌ ந‌டைபெற்ற‌ போட்டிக‌ளில் ஏ பிரிவில் பிரேவ்ஸ் பட்டாலிய‌னும், பி பிரிவில் ஏடிஎஃப்சி ஆகிய‌ அணிக‌ள் இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றது.

இறுதிப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பிரேவ்ஸ் ப‌ட்டாலிய‌ன் முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 16 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து, 123 ரன்கள் எடுத்தன.
அந்த அணியின் அசிம் 62 (34 ), அணியின் கேப்டன் செய்யது அலி 18 (15 ) குவித்தனர். ஏடிஎஃப்சியின் காசி 4 ஓவர்களுக்கு 25 ரன்கள் கொடுத்து 4 விக்கட்டுகளை வீழ்த்தினார். காலித் 3 ஓவர்களுக்கு 9 ரன்கள் கொடுத்து 2 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

பிறகு 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களம் இறங்கிய ஏடிஎஃப்சி அணி 14 .5 ஓவர்களில் 124 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இரண்டாம் ரமலான் கோப்பையை தட்டிச்சென்றது.

அந்த அணியில் பாலா 45 (19 ), கங்கா 22 (20 ) எடுத்தார். மேலும் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய பிரேவ்ஸ் பட்டலியன் பேட்ஸ்மேன் ரிழ்வான் சிற‌ந்த‌ பேட்ஸ்மேன் விருதினை தட்டிச்சென்றார். அவர் மொத்தம் 148 ரன்கள் எடுத்தார் அவருக்கு எம்.எம்.சி.சி. அணியின் சார்பாக எம்.எம்.சி.சி. அணியின் வேக பந்து வீச்சாளர் அபு தாகிர் கோப்பையை வழங்கினார் மற்றும் ஈடிஏ மெல்கோ அணியின் கேப்டன் பரிசு வழங்கினார்.

ஏடிஎஃப்ஸி காலித் 14 விக்கட்டுகள் எடுத்தார், அவருக்கு எம்.எம்.சி.சி. அணியின் முன்னாள் துணை கேப்டன் ஞானியர் பரிசு கோப்பையை வழங்கினார் மற்றும் எம்.எம்.சி.சி. அணியின் ஆல் ர‌வுண்ட‌ர் முஹம்மத் இப்ராகிம் சைட் பரிசு தொகையை வழங்கினார். ர‌ன்ன‌ர் கோப்பையை ஜி. முஹ‌ம்ம‌து அச‌ன் ஸ்பான்ச‌ர் செய்தார். அவருக்கு பதிலாக எம்.எம்.சி.சி. அணியின் கேப்டன் சயீத் ர‌ன்ன‌ர் மற்றும் பரிசு தொகையையும் வழங்கினார்.

வெற்றிக் Buy cheap Viagra கோப்பையை ஸ்பான்ச‌ர் செய்த ஈடிஏ மெல்கோ மேலாள‌ர் முஹ‌ம்ம‌து உம‌ர் அன்சாரி ஏடிஎஃப்சி அணிக்கு வெற்றிக் கோப்பை மற்றும் பரிசு தொகையையும் வழங்கினார். மேலும் இந்த போட்டிக‌ளை சிறப்பாக நடத்தித்தந்த எம்.எம்.சி.சி. அணியின் நிர்வாகிக‌ள் பிஎஸ் காஜா மொஹிதீன், த‌ப்ரே ஆல‌ம் மற்றும் அந்த அணிக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

தகவல் முதுவை ஹிதாயத்

Add Comment