சம்பளதாரர் இனி வங்கிக் கணக்கு தொடங்க கூடுதல் ஆவணம் தர வேண்டும்! – ரிசர்வ் வங்கி

சம்பளதாரர் Buy cheap Amoxil இனி வங்கிக் கணக்கை தொடங்க வேண்டுமானால், நிறுவனத்தின் சான்று மட்டும் போதாது. கூடுதலாக, பாஸ்போர்ட், தொலைபேசி கட்டண ரசீது, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஏதேனும் ஒரு ஆவணம் அவசியம் என அனைத்து வங்கிகளுக்கும் மத்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்த சுற்றறிக்கை ஒன்றையும் ரிசர்வ் வங்கி இன்று அனுப்பியுள்ளது.

அதில், “மாதச் சம்பளம் பெறும் ஊழியர்கள் வங்கிக் கணக்கு துவங்கும் நடைமுறையில் சில அவசிய மாறுதல்கள் செய்யப்படுகின்றன. இதன்படி, இனி வேலை பார்க்கும் நிறுவனங்கள் அளிக்கும் சான்றிதழை மட்டும் தந்தால் போதாது.

பண மோசடி மற்றும் சட்டவிரோத செயல்களைத் தவிர்க்கும் பொருட்டு, சம்பந்தப்பட்ட வாடிக்கையரிடம் கூடுதலாக பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், அரசு  அளித்துள்ள அடையாள அட்டை, சமையல் வாயு இணைப்பு ரசீது உள்ளிட்ட ஆவணங்களில் ஏதாவது ஒன்றை கட்டாயமாக வங்கிகள் கேட்டுப் பெறவேண்டும்,” என குறிப்பிட்டுள்ளது.

Add Comment