புதுச்சேரி, கேரளா, கர்நாடகத்துக்கு புதிய காங். தலைவர்கள் நியமனம்

டெல்லி: புதுச்சேரி  , கேரளா, கர்நாடகம் உள்பட 18 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய மாநிலத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பல்வேறு மாநிலங்களில் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடத்தப்பட்டது. அதன்படி, 7 மாநில தலைவர் தேர்தல் முடிவுகளை காங்கிரஸ் கட்சியின் buy Bactrim online அகில இந்திய தலைமை வெளியிட்டுள்ளது. இது தவிர, 11 மாநிலங்களுக்கு புதிய தலைவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் நடந்த 7 மாநிலங்களுடன் சேர்த்து புதுச்சேரி, கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட 18 மாநில காங்கிரஸ் தலைவர்களின் பெயர்களை கட்சியின் காரிய கமிட்டி பொறுப்பாளரும், தேர்தல் ஆணைய தலைவருமான ஆஸ்கர் பெர்னாண்டஸ் வெளியிட்டார்.

புதிய தலைவர்கள் விவரம்:

ரமேஷ் சென்னிதலா (கேரளம்), டாக்டர் ஜி.பரமேஸ்வரா (கர்நாடகம்), ஏ.வி.சுப்பிரமணியம் (புதுச்சேரி), புபனேஸ்வர் கல்தா (அசாம்), கவுல் சிங் தாகூர் (இமாசலப் பிரதேசம்), கேப்டன் அம்ரீந்தர் சிங் (பஞ்சாப்),

யஷ்பால் ஆர்யா (உத்தரகாண்ட்), ரீடா பகுகுணா ஜோஷி (உத்தரப் பிரதேசம்), மானஸ் ரஞ்சன் புனியா (மேற்கு வங்காளம்), ஜெய் பிரகாஷ் அகர்வால் (டெல்லி), பி.பி.சேத்தி (சத்தீஷ்கார்) ஆகியோர் புதிய தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதே போல நபம் துகி (அருணாசலப் பிரதேசம்), கால்கங்காம் (மணிப்பூர்), பிரைடே லிங்டோ (மேகாலயா), லோல்தான்வாலா (மிஜோராம்), எஸ்.எல்.ஜமீர் (நாகாலாந்து), குல்தீப் சர்மா (அந்தமான்), பூனிக்கம் சைக்கோயா (லட்சத்தீவுகள்) ஆகிய 7 பேரும் காங்கிரஸ் கட்சி தேர்தலில் வென்று தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கட்சி பதவிகளில் பெண்களுக்கு 33 சதவீதம்-சோனியா

இந் நிலையில் காங்கிரஸ் கட்சிப் பதவிகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்குமாறு கட்சித் தலைவர் சோனியா காந்தி  உத்தரவிட்டுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மற்றும் மாநில காங்கிரஸ் கமிட்டிகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யுமாறு மாநில காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

அகில இந்திய அளவில் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களின் எண்ணிக்கை சுமார் 1,000 ஆகும். இவர்கள் தான் காங்கிரஸ் கட்சியின் உயர் மட்ட அதிகாரமிக்க காரிய கமிட்டி உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

இந் நிலையில் மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களில் 33 சதவீதம் பெண்களுக்கு என்பதோடு, மாநில காங்கிரஸ் கமிட்டி நிர்வாகப் பதவிகளிலும் பெண்களுக்கு 33 சதவீதம் அளிக்கப்பட வேண்டும் என்று சோனியா உத்தரவிட்டுள்ளார்.

கட்சியின் எல்லா நிலைகளிலும் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிப்பதற்கான முயற்சிகளை சோனியா காந்தி 10 ஆண்டுகளுக்கு முன்பே மேற்கொண்டார். இப்போது அதை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் முதல் கட்சி என்ற பெருமை காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்துள்ளது.

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதற்கு சோனியா காந்தி ஆரம்பம் முதலே ஆதரவு தெரிவித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. ஆனால் சமாஜ்வாடி  , ராஷ்ட்ரீய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகளின் கடும் எதிர்ப்பால் மக்களவையில் இந்த மசோதாவை இன்னும் நிறைவேற்ற முடியவில்லை. அது கிடப்பில் போடப்பட்டுள்ளது.

Add Comment