பிப்ரவரி 14ல் உரிமை மீட்பு போராட்டம் :தவ்ஹீத் ஜமாத்அறிவிப்பு

இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி மாநில அளவில் பிப்ரவரி 14ல் உரிமை மீட்பு போராட்டம் :தவ்ஹீத் ஜமாத் அறிவிப்பு

 

நெல்லை டவுண் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் 13வது மாநில பொதுக் குழு கூட்டம் மாநில மேலாண்மை குழு தலைவர் சம்சுல்ஹா தலைமை யில் நடைபெற்றது.
மாநில தலைவர் ஜெயினுல் ஆப்தின். பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். 3000க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வரும் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தி வழங்கிட வேண்டும். மத்திய அரசும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்,
இத்தகைய கோரிக்கையை வலியுறுத்தும் வண்ணம் இரு அரசுகளின் கவனத்தை ஈர்ககும் வகையில் வரும் பிப்ரவரி 14ம்தேதி மாநிலம் தழுவிய அளவில் உரிமை மீட்பு போராட்டம் நடத்த வேண்டும்
முஸ்லிம் சமுதாய சொத்துக்களை அவர்களே பாதுகாத்திடும் பொருட்டு அரசு வக்பு வாரியத்தை கலைத்து விட்டு பள்ளிகளை உள்ளுர் ஜமாத்தாரின் பாது காப்பில் விட வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதாவின் தொடர்ந்து முஸ்லிம் விரோத போக்கை இக் கூட்டம் கண்டிக்கிறது. பால் விலை மற்றும் பஸ் கட்டணம் உயர்வை அரசு buy Doxycycline online வாபஸ் பெற வேண்டும்.
கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக பொதுமக்களின் அச்சத்தை போக்கி தேவையான பாதுகாப்பு வசதிகளை உறுதி படுத்திட மத்திய அரசு   நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டாஸ்மாக் கடைகளை மூடி தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல் படுத்த வேண்டும்.அனைத்து பள்ளி வாசல்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.  என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட தலைவர் யூசுப் அலி, செயலாளர் செய்யதுஅலி, பொருளாளர் சாகுல் மற்றும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுக் குழுவில் திரளாக கலந்து கொண்டனர்
thanks for nellaionline.net

Add Comment