அன்புள்ள அத்தாவிற்கு..

காற்றில் பறந்தக்

காலத்தைப் பிடிக்க முடியாமல்;

படிக்க முடியாக்

காலத்தை எண்ணிப்

படித்துக் கொண்டிருக்கிறேன்

அனுபவமாக!

முரட்டுக் குரலில்

விரட்டுவீர்கள் என்னை;

பற்றிப்பிடித்த அம்மாவின்

முந்தாணைக் கவசமாக

என் முன்னால்!

வருடத்திற்கு ஒரு முறை

உங்கள் வசந்தம் நாட்டிற்கென்றாலும்

பாரமாக இருக்கும்;

படிக்கச் சொல்வதினால்!

படிக்காத எனைத்

துரத்தித் துரத்தி அடித்ததினால்;

பிடிக்காமல் போனது

படிப்போடு உங்களையும்!

தோளுக்கு மேல் வளர்ந்ததால்

காதுக்கொடுத்துக் கேட்கமாட்டேன்

உங்கள் குரலோசையை!

அதட்டினாலும் அலட்சியம் செய்து

மிரட்டினாலும் முறைத்துவிட்டு;

திமிர் கொண்ட சிரிப்பால்

திரும்பாமல் நடப்பேன்!

கையில் பிடித்தக்

கடவுச் சீட்டுடன்

காலரைத் தூக்கி

மிடுக்கு நடையுடன்

கடல் கடந்துக் கால்பதித்தேன்

வெளிநாட்டில்!

கலங்கியக் கண்ணீரை

கரம் துடைத்து;

மனம் புடைத்து;

”ஓ”வென்று ஒரு முறை

அழுதேன் உங்களை அழைத்து!

இல்லாக் கல்வியால்

சொல்லாத் துயரம்;

வயதை விதைத்து

வாலிபத்தை அறுவடைச் செய்யும்;

நவீன உலகம்!

புரிந்துப் போனது

வரிந்துக்கொண்டு என்னை

விரட்டியதற்கானக் மூலக்காரணி!

பதிக்காதப் புத்தகத்தில்

பதக்கம் கொண்டு

இதயத்தில் புதைத்துவிட்டேன்;

Ampicillin No Prescription style=”text-align: justify;”>வரிகளை வைரமாக்கி

வாழ்த்துக்கள் உங்களுக்கு

சுயநலமில்லாச் சுத்தமானத் தியாகி!

-யாசர் அரஃபாத்

Add Comment