பிசி, எம்பிசி மாணவர்களுக்கு மாதந்தோறும் கல்வி உதவித் தொகை: ஜெ. உத்தரவு

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ-மாணவியருக்கு பள்ளிக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் உதவித் தொகை வழங்க முதல்வர் ஜெயலலிதா ரூ.11 கோடியே 32 லட்சம் வழங்கியுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

சமூகநீதியை நிலைநாட்டுவதில் முன்னோடியாகத் திகழும் முதல்வர் ஜெயலலிதா பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மக்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக ஏராளமான திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறார்.

இதன் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த மாணவ-மாணவியருக்கு பள்ளிக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ், விடுதியில் தங்காமல் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு மாதம் ரூ.25/- வீதம் 10 மாதங்களுக்கும், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு மாதம் ரூ.40/-வீதம் 10 மாதங்களுக்கும், 9ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு மாதம் ரூ.50/- வீதம் 10 மாதங்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

இதேபோன்று விடுதியில் தங்கி 3ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு Buy Doxycycline மாதம் ரூ.200/- வீதம் 10 மாதங்களுக்கும், 9ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவியர்களுக்கு மாதம் ரூ.250/- வீதம் 10 மாதங்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

இது தவிர தனி மானியமாக ஆண்டொன்றுக்கு ரூ.500/- வழங்கப்படும். ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த மாணவ/மாணவியர் இதனால் பயனடைவார்கள். இதற்கென ரூ.11 கோடியே 32 லட்சம் ஒப்பளிப்பு வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்திரவிட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source:oneindia.in

Add Comment