விமான நிலையத்தில்..

மணக்கும் நம்
மணநாள்;
கனக்கும் இந்நாள்;
விட்டுப்பிரிய உனக்கு
விடைக்கொடுக்க
விமான நிலையத்தில் நாம்!

முட்டிக் கொண்டு
முகத்தை நனைத்துக் கொண்டு;
கண்ணீர் வழியும்;
கண்களில் வலியும்!

அமைதிப்படுத்த
அன்னை அதட்டிப் பார்ப்பாள்;
ஒருநாளும் அழுததில்லை
எனைப்பிரிய என!

கரம் பிடித்த உனக்கு
கைக் காட்டும்
நேரம் வந்தது!

ஈரம் காத்த உன்
கன்னத்தைத் தடவிவிட்டு;
மெல்ல அழுதுவிட்டு
நகர்ந்து விட்டேன்;
பிரிவின் அழுத்தத்தை
உணர்ந்துவிட்டேன்!

-யாசர் அரஃபாத் Buy Levitra Online No Prescription

Add Comment