தமிழகத்தில் ரூ.740 கோடி செலவில் 23 புதிய மேம்பாலங்கள்: ஜெ. அறிவிப்பு

தமிழகத்தில் ரூ.740 கோடி செலவில் 23 புதிய ரயில்வே மேம்பாலங்கள் கட்டபடவிருப்பதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சாலைகள் பல்வேறு பகுதிகளை இணைக்கும் அமைப்பு என்று மட்டுமே கருதாமல், அவற்றை மாநிலத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கான தேவைகள் என்ற அடிப்படையில் முதல்வர் ஜெயலலிதா நெடுஞ்சாலைத் துறையின் மூலம் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள் பல இடங்களில், ரயில்வே இருப்புப்பாதைகளை கடந்து செல்ல வேண்டியுள்ளது. சாலை மேம்பாலங்கள் மற்றும் கீழ் பாலங்கள் இல்லாத இடங்களில், வாகனங்கள் ரயில்வே கடவுகளில் அதிக நேரம் காத்திருந்து பயணங்களை தொடர வேண்டியுள்ளதால் பயண நேரம் அதிகமாதல், காலவிரயம் ஏற்படுதல், எரிபொருள் விரயம் மற்றும் விபத்துகள் ஏற்படுகின்றன.

இதனை உணர்ந்த முதல்வர், இருப்புப்பாதை குறுக்கீடு சாலைகளில் 740 கோடி ரூபாய் செலவில், 23 புதிய ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் கீழ்பாலங்கள் கட்டுவதற்கு நிர்வாக ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளார்.

* காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு மற்றும் ஒட்டிவாக்கம் ரயில்வே நிலையங்களுக்கிடையே 30 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் ஒரு சாலை மேம்பாலம்,

* படாளம்-கருங்குழி ரயில்வே நிலையங்களுக்கிடையே 29 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் ஒரு சாலை தமிழகத்தில் 23 புதிய ரயில்வே மேம்பாலங்கள்: முதல்வர்,

* பாக்கம்-அச்சரப்பாக்கம் ரயில்வே நிலையங்களுக்கு இடையே 32 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் ஒரு சாலை மேம்பாலம்,

* சென்னை-பொன்னேரிகரை-காஞ்சிபுரம் அருகில் 49 கோடியே 42 லட்சம் செலவில் ஒரு ரயில்வே மேம்பாலம்,

* திருவள்ளுர் மாவட்டம் திருநின்றவூர்-வேப்பம்பட்டு சாலையில் 28 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவில் ஒரு சாலை மேம்பாலம்,

* மீஞ்சூர்-காட்டூர் திருவாளைவனம் சாலையில் நன்டியம்பாக்கம்-மீஞ்சூர் ரயில்வே நிலையங்களுக்கு இடையே 28 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவில் ஒரு சாலை மேம்பாலம்,

* விழுப்புரம் மாவட்டம் ஓரக்கூர்-திண்டிவனம் ரயில்வே நிலையங்களுக்கிடையே 20 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு சாலை மேம்பாலம்,

* வெள்ளிமேடுபேட்டை-மயிலம் சாலையில், மயிலம்-பேரணி ரயில்வே நிலையங்களுக்கிடையே 22 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு சாலை மேம்பாலம்,

* விக்கிரவாண்டி-நெமூர் சாலையில், முடியம்பாக்கம்-விக்கிரவாண்டி ரயில்வே நிலையங்களுக்கிடையே 20 கோடியே 20 லட்சம் ரூபாய் buy Ampicillin online மதிப்பீட்டில் ஒரு சாலை மேம்பாலம்,

* ரயில்வே கடவு எண்.126 மற்றும் 127க்கு மாற்றாக 36 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு சாலை மேம்பாலம்,

* வேலூர் மாவட்டம் உளி-வல்லத்தூர் சாலையில் ரயில்வே கடவு எண் 70க்கு மாற்றாக 14 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு கீழ்பாலம்,

* கண்ணாடிகுப்பம்-அய்யனார் சாலையில் ரயில்வே கடவு எண் 78க்கு மாற்றாக 25 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு சாலை மேம்பாலம்,

* வாளையம்பேட்டை-வாணியம்பாடி சாலையில் ரயில்வே கடவு எண். 80க்கு மாற்றாக 25 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு சாலை மேம்பாலம்,

* கோவை மாவட்டம், இராமசந்திர நாயுடு தெருவில், கோயம்புத்தூர் மற்றும் இருகூர் ரயில்வே நிலையங்களுக்கிடையே 26 கோடி 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு சாலை மேம்பாலம்,

* பெரியநாயக்கன் பாளையம் மற்றும் காரமடை ரயில்வே நிலையங்களுக்கிடையே 30 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் ஒரு சாலை மேம்பாலம்,

* பொள்ளாச்சி-ஆனைமலை ரயில்வே நிலையங்களுக்கிடையே 20 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு சாலை மேம்பாலம்,

* போத்தனூர்-செட்டிபாளையம் ரயில்வே நிலையங்களுக்கிடையே 22 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு சாலை மேம்பாலம்,

* சேலம் மாவட்டம், சேலம் புறவழி சாலையில் சேலம் நகரம் மற்றும் சேலம் கிழக்கு ரயில்வே நிலையங்களுக்கிடையே 45 கோடியே 63 லட்சத்தில் ஒரு சாலை மேம்பாலம்,

* ஹஸ்தம்பட்டி சேரி சாலையில், சேலம் சந்தை மற்றும் சேலம் நகரம் ரயில்வே நிலையங்களுக்கிடையே கடவு எண்.184 மற்றும் 185க்கு பதிலாக 58 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு சாலை மேம்பாலம்,

* வி.சி.சி சாலையிலுள்ள சேலம் சந்திப்பு மற்றும் சேலம் சந்தை ரயில்வே நிலையங்களுக்கிடையே 42 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு சாலை மேம்பாலம்,

* ராமநாதபுரம் மாவட்டம் மானாமதுரை-பரமக்குடி ரயில்வே நிலையங்களுக்கு இடையே 37 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் ஒரு சாலை மேம்பாலம்,

* திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் மற்றும் செங்குலம் ரயில்வே நிலையங்களுக்கிடையே 32 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் ஒரு சாலை மேம்பாலம்,

* திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல்-மனக்காட்டூர் சாலையில் உள்ள திண்டுக்கல்–அக்கரைப்பட்டி ரயில்வே நிலையங்களுக்கிடையே உள்ள கடவு எண்.2, திண்டுக்கல்-ஈரோடு ரயில்வே நிலையங்களுக்கிடையே உள்ள கடவு எண்.27 மற்றும் தாமரைப்பாடி– திண்டுக்கல் ரயில்வே நிலையங்களுக்கிடையே உள்ள கடவு எண்.3008க்கு மாற்றாக 59 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் சாலை மேம்பாலம் ஆக 23 சாலை மேம்பாலங்கள்/கீழ் பாலங்கள் 740 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

* கிழக்குக் கடற்கரை சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில் இதனை நான்கு வழிப் பாதையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இச்சாலையில் உள்ள பாலாறு பாலம் பழுதடைந்து உள்ளதால் இப்பாலம் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.

இதனை அறிந்த முதல்வர் ஜெயலலிதா கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள பாலாறு பாலத்தினை 134 கோடி ரூபாய் செலவில் சீரமைக்க ஆணையிட்டுள்ளார்கள். இதில், இப்பாலத்தினை திரும்பக் கட்டுவதற்காக 67 கோடியே 37 லட்சம் ரூபாயும், இப்பாலத்தில் கூடுதலாக இருவழிப் பாலம் அமைக்க 66 கோடியே 63 லட்சம் ரூபாயும் செலவு ஏற்படும்.

நெடுஞ்சாலைத்துறையில் தற்பொழுது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளினால், சாலை போக்குவரத்து வெகுவாக சீர் செய்யப்படும். அதிக அளவில் ரயில்வே இருப்புபாதைகளில் மேம்பாலம் மற்றும் கீழ்பாலம் கட்டப்படுவதால், வாகனங்களின் பயண நேரம் மற்றும் விபத்துக்கள் வெகுவாக குறையும். மேலும், பொதுமக்களும் அதிக சிரமமின்றி குறைந்த நேரத்தில் தாங்கள் செல்ல நினைக்கின்ற பகுதிகளுக்கு செல்ல இயலும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment