கடையநல்லூர் நகராட்சி பகுதியில் 50 ஆயிரம் இலவச கலர் “டிவி’

நெல்லை மாவட்டத்திற்கு 50 ஆயிரம் இலவச கலர் “டிவி’க்கள் விரைவில் வர இருப்பதாகவும், கடையநல்லூர் நகராட்சி பகுதியில் இந்த ஒதுக்கீட்டில் இலவச கலர் “டிவி’ வழங்கப்படும் எனவும் கலெக்டர் ஜெயராமன் தெரிவித்தார்.கடையநல்லூரில் சிறுபான்மை மாணவியர் விடுதி திறப்பு விழா நேற்று நடந்தது. எம்எல்ஏ., பீட்டர் அல்போன்ஸ் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் இப்ராகிம், துணைத் தலைவர் காளிராஜ், பிற்பட்டோர் நல அலுவலர் காசிவிஸ்வம் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் அக்பர் அலி வரவேற்றார்.
விழாவில் யூனியன் சேர்மன் சட்டநாதன், மாவட்ட திமுக பொருளாளர் சேக்தாவூது, நகர திமுக செயலாளர் முகமதுஅலி, தென்காசி ஆர்டிஓ சேதுராமன், தாசில்தார் விஜயா, எம்எல்ஏ அலுவலக மேலாளர் புலவர் செல்வராஜ், தொகுதி இளைஞர் காங்., துணைத் தலைவர் செய்யதலி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மேலாண்மை குழு உறுப்பினர் சைபுல்லா உட்பட பலர் பேசினர்.
விழாவில் எம்எல்ஏ., பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், “”சிறுபான்மையினர் பெரும்பான்மையினராக வாழும் கடையநல்லூரில் சிறுபான்மை மாணவியர் விடுதி அமைத்திட பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நடப்பாண்டில் அனுமதி வழங்கப்பட்ட ஒரே ஒரு சிறுபான்மை மாணவியர் விடுதியினை தமிழக முதல்வர் கருணாநிதி கடையநல்லூருக்கு வழங்கியுள்ளார். அனைத்து வசதிகளும் இந்த விடுதியில் மாணவிகளுக்கு செய்து கொடுக்கப்படும். நகராட்சி பகுதியில் காணப்படும் குடிநீர் பிரச்னையை சமாளிக்க 3 லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டுமென கலெக்டரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது” என்றார்.
சிறுபான்மை மாணவியர் விடுதியினை திறந்து வைத்து கலெக்டர் ஜெயராமன் பேசியதாவது:
எதிர்காலத்தில் Buy Ampicillin Online No Prescription கல்விதான் முக்கியத்துவமாக அமையும். இதனை கருத்தில் கொண்டு இதுபோன்ற மாணவ, மாணவியர் விடுதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பெண் கல்வி அவசியத்தையடுத்து மாணவியர் விடுதி திறக்கப்பட்டு வருகிறது. கடையநல்லூரில் திறக்கப்பட்டுள்ள இந்த விடுதுயில் தற்போது 35 மாணவியர் தங்க வந்துள்ளனர். அனைத்து வசதிகளும் கொண்ட விடுதியாக மாணவியர் விடுதி அமைக்கப்படும்.கடையநல்லூர் நகர பகுதிகளில் குடிநீர் கஷ்டம் உள்ளது தெரிகிறது. நகராட்சி பகுதியில் குடிநீர் பிரச்னையை சமாளிக்க எம்எல்ஏ., வேண்டுகோள் விடுத்துள்ளதன் அடிப்படையில் 3 லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்ய நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் இலவச கலர் “டிவி’ டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாக வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 50 ஆயிரம் இலவச கலர் “டிவி’க்கள் மாவட்டத்திற்கு வரவழைக்கப்படுகிறது. இந்த ஒதுக்கீட்டில் கடையநல்லூர் நகராட்சி பகுதி மக்களுக்கு இலவச கலர் “டிவி’ வழங்கிட ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் செங்கோட்டை யூனியன் சேர்மன் சட்டநாதன், மாவட்ட காங்., துணைத் தலைவர்கள் சிவராமகிருஷ்ணன், முருகேசன், மாவட்ட காங்., செயலாளர் நவாஸ்கான், முன்னாள் மாவட்ட செயலாளர் சண்முகவேல், வட்டார தலைவர்கள் ஆலங்குளம் செல்வராஜ், பண்பொழி மீரான், தொகுதி இளைஞர் காங்., தலைவர் பண்பொழி வினோத், கரடிகுளம் அண்ணாமலை, பஞ்., தலைவர் மாணிக்கம், செல்லத்துரை, இளைஞர் காங்., தொகுதி செயலாளர்கள் கதிரவன், காந்தி, முன்னாள் நகர காங்., தலைவர் பெரியசாமி, நகர செயலாளர்கள் பட்டு, முகமதுஷா, வடகரை காங்., தலைவர் உசேன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Add Comment