20 ஒவர் போட்டி: பா‌கி‌ஸ்தா‌ன் ‌மீ‌ண்டு‌ம் தோ‌ல்‌வி

இர‌ண்டு போ‌ட்டிக‌ள் கொ‌ண்ட இருப‌து‌க்கு இருபது ஓவ‌ர் ‌கி‌ரி‌க்கெ‌ட் தொடரை 2-0 எ‌ன்ற கண‌க்‌கி‌ல் தெ‌ன் ஆ‌‌ப்‌பி‌ரி‌க்கா‌விட‌ம் Amoxil online பா‌கி‌ஸ்தா‌ன் அ‌ணி இழ‌ந்தது.

அபுதாபில் நே‌ற்‌றிரவு நடந்த 2வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி‌யில் பூவா தலையா வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக மிஸ்பா உல் ஹக் 38 பந்துகளில் 2 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 33 ரன்களும், அப்துல் ரசாக் 29 பந்துகளில் 2 சிக்சருடன் 25 ரன்களும் எடுத்தனர்.

121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக சுமித் 42 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 38 ரன்களும், காலின் இங்கரம் 17 பந்துகளில் 4 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 32 ரன்களும் எடுத்தனர்.

இரண்டு 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரை தென் ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. ஆ‌ட்ட நாயகனாக ‌திரோ‌னு‌ம், தொட‌ர் நாயகனாக போ‌த்தா ஆ‌கியோ‌ர் தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.

Add Comment