த‌மிழக‌த்‌தி‌ற்கு த‌ண்‌ணீ‌ர் தர முடியாது: கர்நாடகம் அ‌றி‌வி‌‌ப்பு

கர்நாடகத்தின் தண்ணீர் தேவையைக் கருத்தில் கொண்டு தற்போதைய சூழ்நிலையில் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவது சாத்தியமில்லை என்று கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்து‌ள்ளா‌ர்.

நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புப்படி காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. தற்போது மேட்டூர் அணையில் நீர்மட்டம் மிகவும் குறைந்துள்ளதால் சம்பா பயிருக்குத் தண்ணீர் தேவைப்படுவதால் இந்தக் கோரிக்கையை தமிழக அரசு விடுத்திருந்தது.

தமிழக அரசின் கோரிக்கையையடுத்து, சட்டப் பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை முதலமை‌ச்சர் எடியூரப்பா பெங்களூரு‌வில் நே‌ற்று மாலை கூட்டியிருந்தார். Bactrim online எடியூரப்பா தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

சுமார் ஒரு மணி நேரம் நடந்த ஆலோசனைக்குப் பிறகு நீர்வளத் துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை செ‌ய்‌தியாள‌ர்க‌ளி‌ட‌ம் கூறுகை‌யி‌ல், கர்நாடகத்தில் காவிரி பாசனப் பகுதியில் உள்ள அணைக்கட்டுகளில் நீர் இருப்பு, அணைக்கு நீர்வரத்து, கர்நாடகத்தின் தேவை ஆகியவை குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களுடன் நீண்ட விவாதம் நடத்தப்பட்டது.

தற்போதைய சூழ்நிலையில் காவிரி பாசனப் பகுதிகளில் விவசாயத்துக்கும், பெங்களூரு, மைசூர், மண்டியா போன்ற நகரங்கள், ஊரகப்பகுதி குடிநீர்த் தேவைக்குமே நீர் போதுமானதாக உள்ளது. இதனால், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க இப்போது சாத்தியமில்லை. எனவே, இப்போதைய சூழ்நிலையில் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட இயலாது. தமிழகம் மீண்டும் இதே கோரிக்கையை வலியுறுத்தினால் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை மீண்டும் கூட்டி விவாதிக்கப்படும்.

காவிரி பாசனப் பகுதியில் உள்ள பெரிய அணையான கிருஷ்ணராஜ சாகர் அணையின் மொத்த உயரம் 124.80 அடி. தற்போது இந்த அணையில் 124.70 அடி தண்ணீர் உள்ளது. புதன்கிழமை இரவுக்குள் அணை முழுமையாக நிரம்பிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அணை முழுமையாக நிரம்பிவிட்டால் அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு கூடுதலாக வரும் நீர் காவிரியில் திறந்துவிடப்படும். இவ்வாறு திறந்துவிடப்படும் நீர் தானாகவே தமிழகத்துக்குத்தான் செல்லும்.

கேரள மாநிலம் வயநாடு மற்றும் காவிரி உற்பத்தியாகும் குடகு மாவட்டத்தில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால், காவிரி பாசன அணைகட்டுகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நே‌ற்று மாலை கே.ஆர்.எஸ் அணைக்கு விநாடிக்கு 17 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர்வந்து கொண்டிருந்தது. எனவே, இரவுக்குள் அணை முழு அளவை எட்டிவிடும். இதனால், கூடுதல் நீர் திறந்துவிடப்படுவது தவிர்க்க முடியாதது ஆகும்.

காவிரி நடுவர் மன்ற உத்தரவுப்படி தண்ணீர் திறந்துவிடும் பிரச்சனை இப்போது எழாது. ஏனெனில், இது தொடர்பாக கர்நாடகம் செய்துள்ள மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால் இது குறித்து மேலும் விவாதிக்க விரும்பவில்லை எ‌ன்று அமைச்சர் பசவராஜ் பொம்மை கூ‌‌றினா‌ர்.

Add Comment