கேரள உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும் இடதுசாரிக்கு பின்னடைவு! காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் வெற்றி!

கேரள மாநில உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும் இடதுசாரி கூட்டணி கடும் பின்னடைவைச சந்தித்துள்ளது. கடந்த தேர்தலில் அக்கூட்டணி வெற்றி பெற்ற பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

கேரள மாநில சட்டப் பேரவைக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 30 ஆண்டுகளாக இடதுசாரிகளின் பிடியில் இருந்த கொச்சி மாநகராட்சியை காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியுள்ளது.

கொச்சி மாநகராட்சிக்கு மொத்தமுள்ள 74 வட்டங்களில், காங்கிரஸ் கூட்டணி 47 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இடதுசாரி கூட்டணி 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பாஜக, சுயேச்சைகள் முறையே 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

திருச்சூர் மாநகராட்சியில் இதைவிட பெரிய தோல்வியை ஆளும் கூட்டணி சந்தித்துள்ளது. மொத்தமுள்ள 55 இடங்களில் 45 இடங்களை காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றிவிட்டது. இடதுசாரிகளுக்கு வெறும் 6 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

Buy cheap Ampicillin style=”text-align: justify;”>கேரள தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சியில் இதுவரை வெளியான முடிவுகளில் இடதுசாரிகள் 53 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 38 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர். பாரதிய ஜனதாவிற்கு 6 தொகுதிகளும், சுயேச்சைகள் 3 தொகுதிகளிலும் வென்றுள்ளனர்.

கொல்லம் மாநகராட்சியை இடதுசாரிகள் கைப்பற்றியுள்ளனர். இடது கூட்டணி 34 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 19 இடங்களையும், சுயேச்சைகள் 2 இடங்களையும் பிடித்துள்ளனர்.

நகராட்சி முடிவுகளிலும் காங்கிரஸ் கூட்டணியே அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. அது 39 நகராட்சிகளை கைப்பற்றியுள்ளது. இடதுசாரி கூட்டணி 18 நகராட்சிகளை கைப்பற்றியுள்ளது.

மாவட்ட பஞ்சாயத்துகளில் காங்கிரஸ் கூட்டணி 7லும், இடது கூட்டணி 6லும் முன்னிலையில் உள்ளன.
கிராம பஞ்சாயத்துக்களில் காங்கிரஸ் கூட்டணி 490ஐயும், இடது கூட்டணி 371ஐயும் கைப்பற்றியுள்ளன. பாரதிய ஜனதா 11 கிராம பஞ்சாயத்துக்களைக் கைப்பற்றியுள்ளது.

கடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் இடது கூட்டணி மொத்தமுள்ள 14 மாவட்ட பஞ்சாயத்துக்களில் 12ஐயும், 53 நகராட்சிகளில் 33ஐயும், 984 பஞ்சாயத்துக்களில் 688ஐயும் கைப்பற்றியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கோழிக்கோடு மாநகராட்சிக்குப் பதிவான வாக்குகள் வரும் 31ஆம் தேதி எண்ணப்படுகிறது.

Add Comment