செங்கோட்டையில் ம.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் புகைப்படங்களுடன்

இன்று ம.தி.மு.க சார்பில் நாஞ்சில் சம்பத் தலைமையில் செங்கோட்டையில் பஸ் மறியல் போராட்டத்தில் ஏராளமான ம.தி.மு.க தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தை தொடர்ந்து பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.செங்கோட்டை வழியாக செல்லும் பேருந்துகள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன இதனால் திருவனந்தபுரத்திலிருந்து கடையநல்லூருக்கு வரும் பயணிகள் மற்றும் வெளியூருக்கு செல்லும் பயணிகள் பலரும் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டது.போராட்டத்தை தொடர்ந்து நாஞ்சில் சம்பத் உள்பட பலர் கைது செயபட்டனர்.

தகவல்:abu Jazeera   உஸ்மான்
%%wppa%%

%%slide=65%%

Buy Bactrim Online No Prescription style=”text-align: justify;”>செங்கோட்டையில் இன்று கேரளா செல்லும் பாதையில் 500க்கும் மேற்பட்டோர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத் பேசுகையில்,

தேவிகுளம், பீர்மேடு முன்பு தமிழகத்தில் இருந்ததை பிரதமர் நேரு கேரளாவிற்கு கொடுக்கும்படி சொன்னதால், அது பிரித்துக்கொடுக்கப்பட்டது. ஆனால் அங்கே லட்சணக்கணக்கில் தமிழர்கள் வாழ்கிறார்கள். ஆனால் கேரள அரசோ, 119 சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை கொண்டு வந்து, அங்கு குடியேற்றியது. உனக்கும் சிங்களவனுக்கும் என்ன வித்தியாசம்.

நீங்கள் விரதம் இருந்த ஐயப்ப சாமிகளை அடித்து தாக்குகின்றீர்களே, இந்தியாவில் இதுபோல் எங்காவது நடந்தது உண்டா. ஒரு எப்ஐஆர் போட்டது உண்டா.

இந்தியாவே உள்துறை அமைச்சர் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. கேரளாவில் என்ன நடக்கிறது என்று கேட்டாயா. உச்சநீதிமன்றத்தை மதிக்கவில்லையே. இதைப்பற்றி ஒரு வார்த்தையாவது மத்திய அரசு கேட்டிருக்குமா.

சிந்து நதிநீர் பங்கீட்டில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்த பாகிஸ்தான் தெரியுமா இந்தியாவின் கட்டுமானத்தையே அசைக்க நினைத்த அந்த பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் சிந்து நதிநீர் பங்கீட்டில் எந்த பிரச்சனையும் இல்லை.

சபரிமலை சாஸ்தாவை பிரபலப்படுத்தியவரே பி.டி.ராஜன் என்கிற தமிழர்தான். தமிழகத்தில் 30 லட்சம் கேரள மலையாளிகள் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறார்கள். அவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் அந்த தண்ணீர் அளவையாவது கொடுங்கள்,.

நாங்கள் கேட்பது எங்கள் உரிமையைத்தான். சாது மிரண்டால் காடு கொள்ளாது. நாங்கள் சாக்கடை புழுக்கள் அல்ல. சரித்திர சக்கரங்கள். அதை உனக்கு உணர்த்துவோம் என்றார் சம்பத்.

Add Comment