ரத்தன் டாடா, ரஹ்மான், அமிதாப், சுனில் மிட்டல், டெண்டுல்கருக்கு ஆசிய விருது!

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா, இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான், நடிகர் அமிதாப் பச்சன், தொழிலதிபர் சுனில் மிட்டல், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோருக்கு சிறந்த ஆசியர் விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுதான் இந்த லெபரா ஆசிய விருதுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள தெற்காசியாவைச் சேர்ந்த, சாதனையாளர்கள் மற்றும் அறக்கொடையாளர்களைக் கவுரவிக்க இந்த விருது ஏற்படுத்தப்பட்டுள்ளது. 11 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

செவ்வாய்க்கிழமை லண்டனில் நடந்த விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன. டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடாவுக்கு பிஸினஸ் லீடர் ஆப் தி இயர் விருது வழங்கப்பட்டது.

இசைத்துறை சாதனையாளர் விருது ஏ Cialis online ஆர் ரஹ்மானுக்கும், வாழ்நாள் சாதனையாளர் விருது அமிதாப் பச்சனுக்கும், மக்கள் தெரிவு விருது சச்சின் டெண்டுல்கருக்கும் வழங்கப்பட்டன.

சிறந்த தொழிலதிபருக்கான விருது விஜய் மல்லையாவுக்கும், திரைத்துறையில் மிகப் பெரிய சாதனை செய்தவர் என்ற விருது யாஷ் சோப்ராவுக்கும் வழங்கப்பட்டது.

பார்தி நிறுவனத் தலைவர் மற்றும் அந்த குழுமத்தின் சிஇஓ சுனில் பார்தி மிட்டலுக்கு இந்த ஆண்டின் சிறந்த அறக்கொடையாளர் விருது வழங்கப்பட்டது. கல்விப் பணிகள், இயலாதோருக்கு உதவுதல், ஆதரவற்றோருக்கு நிதியுதவி என பல்வேறு வழிகளில் பார்தி அறக்கட்டளை சார்பில் சுனில் மிட்டல் செய்துள்ள அறப்பணிகளைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

டெலிவிஷன் துறையில் சாதனை செய்ததற்காக ஜார்ஜ் அலக்யா ஒபேவுக்கும், கலை மற்றும் வடிவமைப்புத் துறையில் சாதனைப் படைத்ததற்காக அபு ஜானி மற்றும் சந்தீப் கோஸ்லாவுக்கும், சிறந்த பொது ஊழியர் விருது ஜரின் பட்டேலுக்கும், சமூக முனைவோர் விருது பேராசிரியர் முகமது யூனிஸுக்கும் வழங்கப்பட்டது.

Add Comment