தொடர் கொலை-கொள்ளை: ஆலங்குடி போலீஸ் கூண்டோடு மாற்றம்

முன்னாள் அதிமுக அமைச்சர்  வெங்கடாசலம், திமுக செயலாளர் மணிமாறன் Levitra online ஆகியோர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டது, திமுக எம்.எல்.ஏவின் கார் டயர்கள் திருடு போனது ஆகியவை எதிரொலியாக ஆலங்குடி காவல் நிலைய போலீஸார் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பாதுகாப்பு  மிகவும் மோசமாக உள்ளது. முன்னாள் அதிமுக அமைச்சர் வெங்கடாச்சலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம்  நடந்து சில வாரங்களே ஆன நிலையில் சமீபத்தில் திமுக செயலாளர் மணிமாறன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.

இதுபோக ஒரு திமுக எம்.எல்.ஏவின் கார் டயர்கள் திருடிச் செல்லப்பட்டன. இந்த சம்பவங்களால் ஆலங்குடி மக்கள் பெரும் பீதியடைந்தனர். நகர் முழுவதும் தொடர்நது பதட்டம் நிலவி வருகிறது. இரு பெரும் கொலைகளால் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

மணிமாறன், 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுபோன்ற சம்பவம் நடக்க இருப்பது காவல்துறைக்கு தெரிந்திருந்தும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் சொல்லாததால், இந்த கொலை சம்பவம் நடந்துவிட்டது என அப்பகுதி மக்கள் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில் ஆலங்குடி போலீஸார் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர். எஸ்பிசிஐடி எஸ்.ஐ. கவுதமன் பணி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் ஆலங்குடி காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர்கள் கலியராஜ், இந்திரா, ஏட்டுகள் ரவி, சோலையம்மாள் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Add Comment