உ.பியில் பயங்கரம்-முலாயம் கட்சி எம்.எல்.ஏ மகன் அட்டூழியம்-ஒருவரை சுட்டுக் கொன்றார்

உத்திரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி  கட்சி  எம்.எல்.ஏ.-வின் மகன் குடிபோதையில் ஒருவரை சுட்டுக் கொன்றார். அவரது வெறித்தனமான செயலால் 2 பேர் காயமடைந்தனர்.

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.-வாக இருப்பவர் கங்க்வார். இவரது மகன் அதுல் கங்கவார். இவரும், இவரது நண்பர்களும் குடிபோதையில் ஓட்டிச் சென்ற வாகனம் ராணுவ அதிகாரி ஒருவரின் இரு சக்கர வாகனத்தில் மோதியது. இதில் இரு சக்கர வாகனம் சேதம் அடைந்தது.

வாகனத்தை தானே சரிசெய்து தருவதாகக் கூறி அதுல் அந்த ராணுவ அதிகாரியுடன் அருகிலுள்ள ஹீரோ ஹோண்டா ஷோரூமுடன் இணைந்த மெக்கானிக் ஷாப்புக்குச் சென்றுள்ளார். வேலை நேரம் முடிந்ததால் பழுது பார்க்க முடியாது என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை கேட்டவுடன் அதுல் ஆத்திரத்தில் தன்னிடம் இருந்த கைத் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் நகராட்சி ஊழியர் சரண்சிங், ஷாப்பின் காசாளர் அகிலேஷ் குமார் மற்றும் மேலாளர் ராஜீவ் சர்மா ஆகியோர் காயமடைந்தனர். அவர்களை மருத்துவமனையில் சேர்த்தபோது தலையில் குண்டுபாய்ந்த buy Viagra online சரண்சிங் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அதுலை கைது [^] செய்தனர். அவரின் துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதானபோது அவர் குடிபோதையில் இருந்தததாகத் தெரிகிறது.

Add Comment