சிறுபான்மையினருக்கான 4.5 ரூ இடஒதுக்கீட்டை ஏற்க மாட்டோம் இ. யூ. முஸ்லிம் லீக்

கல்வி, வேலைவாய்ப்பில் மத்திய அரசு அறிவித்துள்ள சிறுபான்மையினருக்கான 4.5 ரூ இடஒதுக்கீட்டை ஏற்க மாட்டோம் இ. யூ. முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் அறிவிப்பு

கல்வி , வேலைவாய்ப் பில் மத்திய அரசு அறிவித் துள்ள சிறுபான்மையின ருக்கு 4.5 சதவீத உள் ஒதுக்கீட்டை நாங்கள் ஏற்க மாட்டோம், சுமார் 13 சத வீதம் இருக்கும் முஸ்லிம்க ளுக்கு ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைப்படி 10 சதவீத ஒதுக்கீடு செய்யப் பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலை வர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட் டார்.

பாண்டிச்சேரியிலிருந்து தென்காசி செல்லும் வழியில் விழுப்புரம் வருகை தந்த தலைவர் பேராசிரியர் அங்குள்ள ராயல் கெஸ்ட் ஹவுசில் விழுப்புரம் கிழக்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியா ளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் குறிப் பிட்டதாவது-
மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் இதர பிற் படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தற்போதுள்ள 27 சதவீத இட ஒதுக்கீட்டீலிருந்து சிறுபான்மை யினருக்கு 4.5 சத வீதம் உள் ஒதுக்கீடு வழங்குவதாக மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய அரசு அறிவித்துள்ள சிறுபான்மையினருக்கான 4.5 சதவீத உள் ஒதுக்கீட்டை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இந்தியத் திருநாட்டில் சுமார் 13 சதவீதம் இருக்கும் முஸ்லிம்களுக்கு நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிவித்த பரிந்துரையின்படி 10 சதவீத இடஒதுக்கீட்டை அமுல் படுத்த வேண்டும் என வலியு றுத்துகிறோம்.

மிஸ்ரா கமிஷன் பரிந்து ரைப்படி இடஒதுக்கீடு அளித் தால்தான் சிறுபான்மையின ருக்கு சமூக நீதி கிடைக்கும். இதைப் புறக்கணித்து விட்டு ஒரு சதவீதம், 2 சதவீதம் என்று அறிவித்தால் அது மக்களை ஏமாற்றும் அரசியல் நாடகமே யன்றி உண்மையான சமூக நீதியாகாது. சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் அதிகாரத்தை அந்தந்த மாநில அரசுகளின் அதிகாரத்துக்கு விட்டு விட வேண்டும். இஸ்லாமிய சமூகத்தில் 7 பிரிவுகளை பிற்பட்டோர் பட்டியலில் தமிழக அரசு இடம் பெறச் செய்துள்ளது. ஆனால் மத்திய அரசு 4 பிரிவுகளை மட் டுமே இடம் பெறச் செய்துள் ளதால் மீதி 3 பிரிவினர் இட ஒதுக்கீட்டில் இடம் பெற முடியாமல் போய்விடுகிறது. ஆகவே, முஸ்லிம்களின் அனைத்துப் பிரிவுகளையும் மத்திய அரசின் பிற்பட்டோர் பட்டியலில் இடம் பெறச் செய்ய வேண்டும்.

தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள்

Buy Viagra style=”text-align: justify;”>இடஒதுக்கீடு தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் 26-ம் தேதி டெல்லியியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய செயற்குழுவும், டிசம்பர் 10-ம் தேதி மதுரையில் தமிழ்நாடு மாநில செயற்குழுவும் கூடி தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைத்ததோடு அவை பத்திரிகையிலும் வெளி வந்துள்ளன.

மத்தியிலும் – மாநிலத்திலும் முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீட்டை வலியுறுத்த வும், அதை உயர்த்தித் தரவும் கோரிக்கை வைத்து நாடு தழுவிய அளவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ஒரு மாத காலம் இந்த பொதுக்கூட்டங்கள் நடை பெற உள்ளன.

வரும் ஏப்ரல் மாதம் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அமைப்பான இளைஞர் லீக் தேசிய மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. பல லட்சம் பேர் பங்கேற்க உள்ள இம் மாநாட்டில் தமிழகத்திலிருந்து 10 ஆயிரத் திற்கும மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்கின்றனர். பயங்கர வாதத்தை முற்றிலும் ஒழிப் போம் – வன்முறையை வேரறுப் போம் என்பதே இம் மாநாட் டின் லட்சியமாகும்.
இவ்வாறு தலைவர் பேராசிரியர் குறிப்பிட்டார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: வன்முறைக்கு கண்டனம்
முன்னதாக புதுச்சேரியில் சையது நிஜாமிஷாஹ் நூரி ஹஸரத் இல்லத் திருமணத் திற்கு வருகை தந்த தலைவர் பேராசிரியர் அங்குள்ள விருந் தினர் மாளிகையில் செய்தி யாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறிய தாவது-
முல்லைப் பெரியாறு பிரச்சினை என்பது தமிழகம் – கேரளா என்ற இரு மாநிலங் களுக்கு இடையிலான பிரச்சினை. இரு மாநில மக்க ளுக்கிடையிலான பிரச்சினை அல்ல. இரு மாநில முதல்வர் களும் பிரதமர் முன்னிலையில் அமர்ந்து பேசி சுமுகமான தீர்வு காண வேண்டும். இதை விட்டு விட்டு இரு மாநில மக்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கக் கூடாது.

கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள். தமிழ்நாட் டில் மலையாளிகள் தாக்கப் படுகிறார்கள். இந்தப் போக்கு நல்லதல்ல. முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். புதுவை மாநிலத்தில் மலையாளிகள் தாக்கப்படுகிறார்கள். மலையாளிகள் நடத்தும் 8 கடைகள் உடைக்கப்பட்டு முற்றிலுமாக சேதப்படுத்தப் படுகின்றன.

புதுவையில் மாஹிவாசிகள் கடைகள் மீதுதாக்குதல்
ஆனால், அந்த கடைகளை மலையாளிகள் நடத்துகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக தாக்கியுள்ளனர். அவர்கள் யார் என்றால் புதுச்சேரி மாநிலத் திற்கு உட்பட்ட மாஹி பகுதி யைச் சேர்ந்தவர்கள். மலையாளி மொழி பேசுகிறார்கள் என்ற ஒரேகாரணத்தாலேயே சொந்த மாநிலத்திலேயே இவர்கள் தாக்கப்படுகிறார்கள். இது வேதனைக்குரியது. வன்மை யாக கண்டிக்கத்தக்கது. இப்படி தாக்கப்பட்ட அனை வருக்கும் அந்தநத மாநில அரசுகள் நட்ட ஈடு வழங்க வேண்டும். தாக்குதலை ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இந்த வன்முறை நடவடிக்கைளை இந்திய யூனியன் முஸ்லிம்லீக் ஒரு போதும் அனுமதிக்காது.

முல்லைப்பெரியாறு அணை உடைந்தால் இந்தியா உடையும் என வால்போஸ்டர்கள் பகிரங்கமாக ஒட்டப்பட்டு வருகின்றன. யார் செய்தாலும் இதை அனுமதிக்க முடியாது. இப்பிரச்சினையில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கூறி`ய அருமையான யோசனையின்படி தீர்த்துக் கொள்ள முடியும்.

இந்தியாவை ரயில் போக்கு வரத்து மூலம் மத்திய அரசு இணைத்துள்ளதுபோல், தேசிய நெடுஞ்சாலை மூலம் இணைத் துள்ளதுபோல் அனைத்து நதிக ளையும் இணைக்க வேண்டும்.

ஆளுநரிடம் மனு
இப் பிரச்சினைகளை வலியுறுத்தி ஆளுநரிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மனு அளிக்க உள்ளோம்.
இவ்வாறு தலைவர் பேராசிரியர் குறிப்பிட்டார்.

இப் பேட்டியின் போது, புதுச்சேரி மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர்கள் ஹம்சா, ராஜா முஹம்மது, துணைத் தலைவர் அமீர் அலி, புதுச்சேரி மாவட்டத் தலைவர் ஹைருல்லாஹ், செய லாளர் முஹம்மது அலி, பொரு ளாளர் ஷேக் அப்துல்லா உள் ளிட்டோர் உடன் இருந்தனர்.

விழுப்புரம் செய்தியாளர்கள் கூட்டத்தில் விழுப்புரம் கிழக்குமாவட்ட செயலாளர் ஹாஜி அமீர் அப்பாஸ், துணைத் தலைவர்கள் செய்யது இப்ரா ஹீம், சுல்தான் மொய்தீன், மவ்லவி சாகுல் ஹமீது, வி.ஆர். முஹம்மது இப்ராஹீம், துணைச் செயலாளர்கள் கோட்டகுப்பம் அமீர் பாஷா, முபாரக், சபீயுல்லா, மாநில பொதுக்குழு உறுப் பினர் ஷேக்தாவூது, நகரச் செய லாளர் கனி, எக்ஸ். எம்.சி. உள் ளிட்டோர் உடன் இருந்தனர்.

-KaKaChe
Kadayanallur

Add Comment