சட்டமன்ற தேர்தலில் தென்மாவட்டத்தில் போட்டி-சரத்குமார்

வரும் சட்டமன்ற தேர்தலில் தென்மாவட்டத்தில் போட்டியிடுவேன் என்று சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார்  அறிவித்துள்ளார்.

நெல்லையில் சரத்குமார் அளித்த பேட்டி வருமாறு,

நவம்பர் மாதம் 28-ம் தேதி கோவையிலும், டிசம்பரில் நெல்லை ஆலங்குளத்திலும் சமக பொதுக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 15-ம் தேதிக்குள் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு முழுவதுமாக கட்சி பணியில் ஈடுபடுவேன்.

ஜனவரி மாதத்தில் இருந்து மக்களை தரிசிக்கத் Doxycycline No Prescription திட்டமிட்டுள்ளேன். இதன் மூலம் மக்களைத் தேடிச் சென்று அவர்களின் குறைகளை கேட்டறிவேன். டிசம்பர் மாதம் 9-ம் தேதி விருதுநகரில் காமராஜர் மணிமண்டபப் பணிகள் துவங்கப்படும்.

வரும் சட்டமன்ற தேர்தலில் தென்மாவட்டங்களில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிடுவேன். கூட்டணி குறித்து மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதனால் நான் போட்டியிடும் தொகுதி முடிவாகவில்லை.

தேர்தலில் கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயம் ஆகியவற்றை மையமாக வைத்து பிரச்சாரம் செய்யப்படும். நலிவடைந்து வரும் விவசாயத்தை பாதுகாக்க வீ்ட்டிற்கு ஒரு விவசாயி என்ற நிலை உருவாக வேண்டும். வேலைவாய்ப்பை அதிகரிக்க அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும்.

தென்மாவட்டங்களில் அரசு தொழிற்சாலைகளை ஏற்படுத்த வேண்டும். மணல் கொள்ளையை தடுக்கவும், கள் இறக்க அனுமதி கோரியும் தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் நெப்போலியனின் மகன் தனுஷை சந்தித்து நலம் விசாரித்தார்.

Add Comment