பயிற்சியாளராக கிறிஸ்டன் நீடிக்க வேண்டும்: கவுதம் காம்பிர் விருப்பம்

உலக கோப்பை தொடருக்கு பின், இந்திய அணியின் பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன் நீடிக்க வேண்டும்,” என, துவக்க வீரர் கவுதம் காம்பிர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் பயிற்சியாளராக தென் ஆப்ரிக்காவின் கேரி கிறிஸ்டன் உள்ளார். இவரது வருகைக்கு பின், அணியின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலக கோப்பை தொடருக்கு பின், இவரது பதவி காலம் முடிவுக்கு வருகிறது. இதனையடுத்து தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட சில நாடுகள், இவரை தங்கள் அணியின் பயிற்சியாளராக நியமிக்க ஆலோசனை நடத்தி வருகின்றன.
இதுகுறித்து இந்திய அணியின் துவக்க வீரர் கவுதம் காம்பிர் கூறியதாவது: இந்திய அணியின் சிறந்த பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன் வலம் வருகிறார். அணியின் அடுத்தடுத்த வெற்றிகள் மூலம் இவரது திறமையை அறிந்து கொள்ளலாம். உலக கோப்பை தொடருக்கு பின், இவரது பதவி காலம் முடிவடைகிறது. இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), Levitra No Prescription இவரது பதவி காலத்தை அதிகரிக்க வேண்டும். இந்திய அணிக்கு, இவரது பங்களிப்பு இன்னும் சில ஆண்டுகள் தேவைப்படுகிறது.
வரும் டிசம்பர் மாதம் இந்திய அணி மூன்று டெஸ்ட், ஒரு “டுவென்டி-20′ மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க தென் ஆப்ரிக்கா செல்கிறது. இத்தொடருக்கான இந்திய “டாப்-ஆர்டர்’ பேட்ஸ்மேன்களை, ஒரு வாரத்திற்கு முன் தென் ஆப்ரிக்கா அனுப்ப பயிற்சியாளர் கிறிஸ்டன் முடிவு செய்துள்ளார். இவரது இந்த முடிவு வரவேற்கத்தக்கது. இதன்மூலம் இந்திய பேட்ஸ்மேன்கள், தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சை எளிதாக சமாளிக்க பயிற்சி மேற்கொள்ள முடியும்.
தற்போது முதுகு வலியிலிருந்து மீண்டு வந்துள்ளேன். நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர், எனக்கு சவால் நிறைந்ததாக இருக்கும். எந்த ஒரு அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. இதனை சமீபத்தில் நடந்த வங்கதேசம்-நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர் மூலம் தெரிந்து கொள்ளலாம். வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை நியூசிலாந்து இழந்ததால், எளிதாக நினைத்துவிடக் கூடாது. நியூசிலாந்து அணியில் திறமையான நிறைய வீரர்கள் உள்ளனர். இவர்கள் எழுச்சி பெறும் பட்சத்தில், இந்திய வீரர்களுக்கு சிக்கலாகிவிடும்.
இவ்வாறு காம்பிர் கூறினார்.

Add Comment