லலித் மோடியின் உயிருக்கு ஆபத்து

லலித் மோடியின் உயிருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போதைக்கு இந்தியா திரும்ப மாட்டார்,” என, அவரது வக்கீல் மகமூத் அப்தி தெரிவித்துள்ளார்.
இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) அமைப்பின் முன்னாள் தலைவர் லலித் மோடி. ஐ.பி.எல்., அணிகளை ஏலத்தில் எடுத்தது, ஒளிபரப்பு உரிமை வழங்கியது உள்ளிட்டவற்றில் மோடி மீது ஊழல் புகார் சுமத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மோடியை, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) “சஸ்பெண்ட்’ செய்தது.
இவர் மீதான ஊழல் புகார் குறித்து அமலாக்கப்பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் லலித் மோடி இந்தியாவுக்கு வராமல், லண்டனில் தங்கியுள்ளார். இதனால், மோடியின் “பாஸ்போர்ட்டை’ திரும்ப பெறுமாறு, வெளியுறவுத் துறையிடம், அமலாக்கப்பிரிவினர் தெரிவித்தனர். இது குறித்து பதிலளிக்குமாறு மோடிக்கு கடந்த 15 ம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இது குறித்து மோடியின் வக்கீல் மகமூத் அப்தி கூறியது:
லலித் மோடி தற்போதைக்கு இந்தியா வரமாட்டார். அவரது உயிருக்கு சிலர் மிரட்டல் விடுத்துள்ளனர். buy Doxycycline online வெளியுறவுத் துறை, “பாஸ்போர்ட்டை’ திரும்ப பெறுவது குறித்து மோடிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. “பாஸ்போர்ட்’ தொடர்பாக என்ன ஆதாரங்கள் தேவை என வெளியுறவுத் துறைக்கு கடந்த 26 ம் தேதி கடிதம் அனுப்பி உள்ளோம். ஆனால் இதுவரை பதில் இல்லை. அவர் தலைமறைவாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. லண்டனில் இருந்து அமலாக்கப்பிரிவினரிடம் தொடர்பு கொண்டு தான் உள்ளார்.
இவ்வாறு அப்தி தெரிவித்தார்.
மோடி வித்தை:
இந்தியாவில் மோடிக்கு கடும் நெருக்கடி உள்ளது. அவர் இந்தியா வந்தால், அந்நிய செலாவணி மோசடி தொடர்பாக அமலாக்கப்பிரிவினரின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். மறுபுறம் வருமான வரித் துறையினர் ஆதாரங்களுடன் தேடி வருகின்றனர். ஒளிபரப்பு உரிமை வழங்கியதில் ஊழல் செய்தது தொடர்பாக, சென்னை போலீசார் “கிரிமினல் வழக்கு’ பதிவு செய்துள்ளனர். இவற்றுக்கு எல்லாம் பயந்து தான், லண்டனில் முகாமிட்டுள்ளார் மோடி.

Add Comment