கோப்பை வென்றது தென் ஆப்ரிக்கா: பாக்., மீண்டும் ஏமாற்றம்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2வது “டுவென்டி-20′ போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட “டுவென்டி-20′ தொடரை தென் ஆப்ரிக்கா 2-0 என கைப்பற்றி, கோப்பை வென்றது.
அபுதாபியில், பாகிஸ்தான்-தென் ஆப்ரிக்கா அணிகள் மோதிய 2 Buy Bactrim Online No Prescription போட்டிகள் கொண்ட “டுவென்டி-20′ தொடர் நடந்தது. முதல் போட்டியில் வெற்றி கண்ட தென் ஆப்ரிக்க அணி 1-0 என முன்னிலை வகித்தது. இந்நிலையில் 2வது போட்டி நேற்று முன்தினம் அபுதாபியில் நடந்தது. “டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் அப்ரிதி, பேட்டிங் தேர்வு செய்தார்.
மிஸ்பா ஆறுதல்:
தென் ஆப்ரிக்க அணிக்கு ஷாசாயிப் ஹசன் (6), இம்ரான் பர்கத் (9) ஜோடி மோசமான துவக்கம் கொடுத்தது. அடுத்து வந்த முகமது ஹபீஸ் (14) நிலைக்கவில்லை. மிஸ்பா (33) ஆறுதல் அளித்தார். உமர் அக்மல் (5), அப்ரிதி (3) ஏமாற்றினர். அப்துல் ரசாக் (25), ஹைதர் (17) ஓரளவு கைகொடுக்க, பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்தது.
ஸ்மித் அபாரம்:
சுலப இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு ஸ்மித், போஸ்மன் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 38 ரன்கள் சேர்த்த போது போஸ்மன் (11) அவுட்டானார். அடுத்து வந்த டிவிலியர்ஸ் (11) நீடிக்கவில்லை. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மித் (38) நம்பிக்கை அளித்தார். பின் டுமினி (20*), பீட்டர் இங்கிராம் (31) கைகொடுக்க, தென் ஆப்ரிக்க அணி 18.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்து, வெற்றி பெற்றது.
இதன்மூலம் தொடரை 2-0 என தென் ஆப்ரிக்க அணி கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக தென் ஆப்ரிக்காவின் திரான் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகன் விருதை தென் ஆப்ரிக்காவின் போத்தா தட்டிச் சென்றார்.

Add Comment