செய்னா சம்பளம் ரூ. 1 கோடி!: கிரிக்கெட் வீரர்களுக்கு சவால்

பாட்மின்டன் அரங்கில் வெற்றி நாயகியாக வலம் வரும் செய்னா நேவல், விளம்பர உலகிலும் கொடி கட்டிப் பறக்கிறார். தற்போது ஒரு நிறுவனத்துக்கு விளம்பர “மாடலாக’ தோன்ற, ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார். இதன் மூலம் கிரிக்கெட் வீரர்களுக்கு சவால் விடுத்துள்ளார்.
இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை செய்னா நேவல்(20). சமீப காலமாக பாட்மின்டன் போட்டிகளில் அசத்தி வருகிறார். இந்த ஆண்டு சிங்கப்பூர் ஓபன், இந்தோனேசியன் சூப்பர் சீரிஸ் உட்பட தொடர்ந்து மூன்று தொடர்களில் “ஹாட்ரிக்’ பட்டம் வென்று சாதித்தார். டில்லி, காமன்வெல்த் போட்டியில் தங்கம் கைப்பற்றினார்.
இப்படி வெற்றி மேல் வெற்றி பெற, செய்னாவை ஒப்பந்தம் செய்ய முன்னணி விளம்பர நிறுவனங்கள் போட்டியிடுகின்றன. இவரை “ஏர்டெல்’ போன்ற நிறுவனங்கள் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளன. இதன் மூலம் கிரிக்கெட் வீரர்களுக்கு நிகரான அந்தஸ்தை பெற்றுள்ளார்.
தோனி முன்னிலை:
கடந்த 2006ல் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சினை பிரபல விளம்பர நிறுவனம் மூன்று ஆண்டுகளுக்கு 180 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது. இந்த சாதனையை கேப்டன் தோனி தகர்த்தார். இவரை 3 ஆண்டுகளுக்கு 210 கோடி ரூபாய்க்கு “ரிதி ஸ்போர்ட்ஸ்’ நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. சச்சின் ஒரு பொருளுக்கு மாடலாக தோன்ற 3 கோடி ரூபாய் பெறுகிறார். தோனி ஒரு பொருளுக்கு 6 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். சேவக் போன்ற மற்ற முன்னணி வீரர்கள் ஒரு கோடி ரூபாய் தான் பெறுகின்றனர். இவர்கள் வரிசையில் செய்னாவும் சேர்ந்துள்ளார். டென்னிஸ் நட்சத்திரம் சானியா 10 முதல் 15 லட்சம் ரூபாய் தான் பெறுகிறார்.
தற்போது ஏர்டெல், அடானி வில்மர், யோனெக்ஸ், ஜெய்ப்பி சிமென்ட்ஸ் போன்ற நிறுவனங்கள் செய்னாவை கோடிகள் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளன. பாட்மின்டன் வீராங்கனை பற்றிய தொடரில் நடிப்பதற்காக ஸ்டார் “டிவி’ நிறுவனமும் இவரை Buy Levitra Online No Prescription அணுகியுள்ளது. ஒரு தொடருக்கு 5 லட்சம் ரூபாய் அளிக்க முன் வந்துள்ளது.
இது குறித்து செய்னா கூறுகையில்,””காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற பின், எனது விளம்பர வருமானம் உயர்ந்து விட்டது. கிரிக்கெட் வீரர்கள் தவிர, மற்ற விளையாட்டு நட்சத்திரங்களுக்கும் முக்கியத்துவம் அளிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது,”என்றார்.

Add Comment