குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

குற்றால buy Bactrim online அருவிகளில் தண்ணீர் வரத்து தாராளமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர்.குற்றாலம் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்யாததால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குற்றாலம் மலை பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக நேற்று அருவிகளில் தண்ணீர் வரத்து தாராளமாக இருந்தது. மெயின் அருவியில் மிதமாக தண்ணீர் விழுந்தது. ஐந்தருவியில் 5 கிளைகளிலும் தண்ணீர் கொட்டியது.சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக காணப்பட்டதால் அவர்கள் எவ்வித இடையூறும் இன்றி அருவிகளில் நீண்ட நேரம் நின்று குளித்து மகிழ்ந்தனர். பழையகுற்றால அருவியிலும் தண்ணீர் வரத்து இருந்தது.

Add Comment