பி.எஸ்.என்.எல்.,வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி சலுகைககள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பி.எஸ்.என்.எல்.,நிறுவனம் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவித்துள்ளது.
இதுகுறித்து பி.எஸ்.என்.எல்.,பொதுமேலாளர் பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள Lasix online செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பி.எஸ்.என்.எல்.,நிறுவனம் சார்பில் பொதுமக்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. “என் நண்பன் சூப்பர்’ என்ற பெயரில் கடந்த 7ம் தேதி முதல் சிம்கார்டு அறிமுகம் செய்யப்பட்டன. இந்த பிளானில் இருந்து, ஒரு பி.எஸ்.என்.எல்.,லேண்ட் லைன் நம்பருக்கு முற்றிலும் இலவசமாக பேசலாம். மேலும் 30 பைசா கட்டணத்தில் 2 பி.எஸ்.என்.எல்.,நம்பரில் பேசலாம். ஒவ்வொரு மாதமும் 200 எஸ்.எம்.எஸ்.,இலவசமாக வழங்கப்படுகிறது.தமிழ்நாட்டில் பி.எஸ்.என்.எல்.,நெட்வொர்க்கிற்கு இரவு 11 மணி முதல் காலை 7 மணிவரை பேச ஒரு நிமிடத்திற்கு 20 பைசா மட்டுமே.பி.எஸ்.என்.எல்.,வாடிக்கையாளர்களுக்கு 20 ரூபாய் மதிப்புள்ள சிம்கார்டு இலவசமாக வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் 46 ரூபாய் மதிப்புள்ள எப்.ஆர்.சி.,டாப் அப்மூலம் 180 நாட்கள் வேலிடிட்டியுடன் 10 ரூபாய் டாக்டைமும் பெற முடியும். இத்திட்டத்தில் தொடர்ந்து நீடிக்க ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 50 ரூபாய்க்கு டாப் அப் செய்ய வேண்டும்.பி.எஸ்.என்.எல்.,3ஜி டேட்டா கார்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையாக 275 ரூபாய், 440 ரூபாய், 716 ரூபாய்க்கான டேட்டா ரீசார்ஜ் விலை குறைக்கப்பட்டு 222 ரூபாய், 352 ரூபாய், 572 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. மேலும் 2 ஆயிரத்து 756 ரூபாய்க்கு 3ஜி டேட்டா அன் லிமிடெட் விலை அதிரடி சலுகையாக ஆயிரத்து 499 ரூபாய்க்கு கொடுக்கப்படுகிறது. 3ஜி டேட்டா கார்டு உடனடியாக பெற்றுக்கொள்ள நெல்லை பி.எஸ்.என்.எல்.,பொதுமேலாளர் அலுவலகத்தில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகலாம்.பொதுமக்கள் 3ஜி டேட்டா கார்டின் குறுகிய கால பயன்பாட்டிற்கு புதிய அறிமுக பேக் 10,25,50 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல்.,3ஜி போஸ்ட்பெமிட் 519 ரூபாய்க்கும், 999 ரூபாய்க்கும், ஆயிரத்து 359 ரூபாய்க்கும் திட்டத்தின் மூலம் 19 மாதம் 10 மாதம், 7 மாதம் என 9 ஆயிரத்து 861 ரூபாயும், 9 ஆயிரத்து 920 ரூபாயும், 9 ஆயிரத்து 513 ரூபாயும் முன்பணம் மொத்தமாக செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள 3ஜி டேட்டா கார்டு இலவசமாக வழங்கப்படுகிறது.அனைத்து 2ஜி வாடிக்கையாளர்களுக்கும், வீடியோ கால் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. 2ஜி சிம்கார்டை 3ஜி வசதியுள்ள மொபைலில் போட்டு யு.எம்.டி.எஸ்.,அல்லது ஆட்டோமேட்டிக் தேர்வு செய்தால் 3ஜி கவரேஜ் உள்ள இடங்களில் இந்த வசதி கிடைக்கும்.இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment